தஞ்சாவூா்: தஞ்சாவூர் அருகே முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்ற வாகனத்தை தேர்தல் பறக்கும்படை அதிகாரிகள் நிறுத்தி சோதனை செய்தனர்.
தமிழகத்தில் வரும் 23-ம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவிருக்கிறது. இதையொட்டி வாக்காளர்களுக்கு பணம், பரிசுப் பொருட்கள் வழங்குவதை தடுக்க மாநிலம் முழுவதும் தீவிர வாகனச் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி தஞ்சாவூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களிலும் பறக்கும் படை, நிலையான கண்காணிப்புக் குழு அதிகாரிகள் வாகனச் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
உரிய ஆவணங்கள் இல்லாமல் ரூ.50 ஆயிரத்திற்கும் மேல் கொண்டு செல்லப்படும் ரொக்கம் மற்றும் பொருட்களை பறிமுதல் செய்து வருகின்றனர். பறிமுதல் செய்யப்படும் ரொக்கப் பணம் , பொருட்களுக்கு உரிய ஆவணங்களை காண்பித்த பிறகு அவற்றை விடுவித்து வருகின்றனர் .
