தடைகளை தாண்டி “ஜனநாயகன்” படம் வெளியாகிறது – இயக்குனர் எச் வினோத்

விஜய் ‘ஜனநாயகன்’ படத்தை தேர்ந்தெடுத்ததற்குக் காரணம் பெண் முன்னேற்றத்தின் மீதான அவரது தீவிர ஆர்வமே என இயக்குனர் எச் வினோத் கூறியுள்ளார்.

தமிழக முதல்-அமைச்சர் விஜய் நடிப்பில், இயக்குநர் எச். வினோத் இயக்கத்தில் உருவாகிய ‘ஜனநாயகன்’ திரைப்படம், இந்த ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்படும் தமிழ் திரைப்படங்களில் ஒன்றாகும். இப்படத்தில் பூஜா ஹெக்டே, பாபி தியோல், மமிதா பைஜு, கௌதம் வாசுதேவ் மேனன், பிரகாஷ் ராஜ் மற்றும் நரேன் போன்ற பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்,

தணிக்கைப் பிரச்னைகளிலிருந்து மீண்டு வருகிற 23 ஆம் தேதி திரைக்கு வருகிறது. விஜய்யின் இறுதியான படமென்பதால் உலகளவில் 3,500 திரைகளுக்கு மேல் வெளியாகவுள்ளது.

இந்த நிலையில், சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள கேவிஎன் அலுவலகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் இயக்குநர் எச்.வினோத் பேட்டி அளித்துள்ளார்.

இயக்குநர் எச். வினோத்,“ பல தடைகளைத் தாண்டி வெளியாகிறது ‘ஜனநாயகன்’ திரைப்படம். விஜய் அவர்களுக்கு தனது கடைசி படம் இப்படி இருக்க வேண்டும் என்று சில எண்ணங்கள் இருந்திருக்கலாம். பல கதைகளை கேட்ட பிறகு விஜய் இந்த படத்தைத் தேர்ந்தெடுத்ததற்குக் காரணம் பெண் முன்னேற்றத்தின் மீதான அவரது தீவிர ஆர்வமே. படம் இணையத்தில் கசிந்தாலும் முன்பதிவு நன்றாக இருக்கிறது. படத்துக்கு ‘ஏ’ சான்றிதழ் கிடைத்ததில் வருத்தம். ‘ஜனநாயகன்’ வெறுப்புக்கு எதிரான படம்.. ஒற்றுமையை பேசும் படம்.. வெறுப்புக்கான எதிரான படத்தின் மீது வெறுப்பை திணிப்பது சரியில்லை ” என கூறியுள்ளார்.

Source link