புதுடில்லி: ரம்ஜான் பண்டிகையையொட்டி வாழ்த்து தெரிவிக்க, மேற்காசிய நாடான குவைத்தின் பட்டத்து இளவரசர் ஷேக் சபா அல் – -காலேத் அல் – -ஹமத் அல் – -முபாரக் அல் – -சபாவுடன் பிரதமர் மோடி நேற்று தொலைபேசியில் நேற்று பேசினார்.
இதுகுறித்து சமூக ஊடகத்தில் பிரதமர் மோடி வெளியிட்ட பதிவு:
குவைத்தின் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டின் மீதான தாக்குதல்களுக்கு இந்தியா சார்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.
மேற்காசிய பிராந்தியத்தில் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மைக்கு நீடித்த பேச்சு நடத்துவது இன்றியமையாதது என்பதை இருதரப்பும் ஒப்புக்கொண்டோம்.
இதேபோல், குவைத்தில் உள்ள இந்திய சமூகத்தின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் அந்நாட்டின் அரசின் நடவடிக்கைக்கு நன்றி தெரிவித்தேன்.
உலகின் மிக முக்கியமான எரிபொருள் வழித்தடங்களில் ஒன்றான ஹார்முஸ் ஜலசந்தியில் ஏற்பட்டுள்ள இடையூறுகள் குறித்தும் நம் நாட்டின் கவலையை சுட்டிக்காட்டினோம். இந்த வழியாக பாதுகாப்பான மற்றும் தடையற்ற போக்குவரத்தை உறுதிசெய்வதே எங்களின் முன்னுரிமையாக உள்ளது.
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
