சென்னை: தமிழகத்தில், அரசியல் கட்சிகள் கூட்டணிகளை உறுதி செய்து, தொகுதி பங்கீடு பேச்சை துவக்கி உள்ளன. இந்த சூழலில், முன்னாள் முதல்வர் பன்னீர் செல்வம், எந்த கூட்டணியில் இணையப் போகிறார் எனத் தெரியாமல், அவரது ஆதரவாளர்கள் குழப்பத்தில் உள்ளனர்.
இந்நிலையில், முன்னாள் முதல்வர் பன்னீர் செல்வம், சென்னை விமான நிலையத்தில், நேற்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, ‘தை முடிவதற்குள், கூட்டணி முடிவை அறிவிப்பதாக தெரிவித்தீர்களே” என்ற கேள்விக்கு, ”தை மாதம் முடிய, இன்னும் நாட்கள் உள்ளன” என்றார். ”ஓ.பி.எஸ்., புதிய கட்சி துவங்குவாரா அல்லது விஜ யின் த.வெ.க.வில் இணைவாரா,” என்ற கேள்விக் கு, ”எந்த ஓ.பி.எஸ்.,” என சிரித்தபடி, பதிலளித்தார்.
