தனுஷ் அரசியலுக்கு வந்தால் திமுக, அதிமுக காணாம போயிடும்: விஜய்ணா ஜோதிடர் ரிக்கி ராதன் பண்டிட் – cm joseph vijay astrologer ricky radhan pandit predicts dhanush future in politics

முதல்வர் ஜோசப் விஜய்யின் ஆஸ்தான ஜோதிடரான ரிக்கி ராதன் பண்டிட் தனுஷ் ஜாதகத்தை பார்த்திருப்பதாக கூறியிருக்கிறார். மேலும் தனுஷ் அரசியலுக்கு வந்தால் திமுக, அதிமுகவுக்கு என்ன நடக்கும் என்பதையும் கணித்துவிட்டார்.

அரசியலுக்கு வருகிறார் தனுஷ் என்று பேசப்படும் நிலையில் அவர் பற்றி கணித்திருக்கிறார் ஜோதிடர் ரிக்கி ராதன் பண்டிட்.

அரசியலில் தனுஷ்?

தனுஷ் ரசிகர் மன்ற கொடியில் ஏற்பட்ட மாற்றமும், அவரின் பிறந்தநாளையொட்டி ரசிகர்கள் நடத்திய ரத்ததான முகாமில் அவர் பேசிய பேச்சையும் பார்த்தவர்களோ, இது அரசியலுக்கான வேலை தான் என்கிறார்கள். அந்த விழாவில் தனுஷ் ஒரு முறை கூட அரசியல் பற்றி பேசவில்லை என்று அவரின் ரசிகர்கள் கூறி வருகிறார்கள். இருந்தாலும் தனுஷ் அரசியலுக்கு வருவது உறுதி என்று மக்கள் முடிவே செய்துவிட்டார்கள். இந்நிலையில் முதல்வர் விஜய்யின் நம்பிக்கைக்குரிய ஜோதிடர் ரிக்கி ராதன் பண்டிட் தனுஷ் பற்றி கணித்து பேசியிருக்கிறார்.

ரிக்கி கணிப்பு

தனுஷ் குறித்து ரிக்கி ராதன் பண்டிட் கூறியிருப்பதாவது, தனுஷ் அரசியலுக்கு வந்துவிட்டால் திமுக, அதிமுக ஆகிய கட்சிகள் இருக்காது. அரசியலில் இரண்டாவது இடத்தை தனுஷ் பிடித்துவிடுவார். ஒரு கட்டத்தில் விஜய் சார் vs தனுஷ் என மாறவும் வாய்ப்பு உள்ளது. தனுஷ் ஜாதகத்தில் அந்த யோகம் இருக்கிறதா என நான் பார்த்திருக்கிறேன் என்றார். ராதன் பண்டிட் பேசியதை பார்த்த சிலரோ, விஜய் ஜோசியரே சொல்லிவிட்டார். அப்புறம் என்ன தனுஷ், அரசியல் களத்தில் தொபுக்கடினு குதித்துவிட வேண்டியது தானே என்கிறார்கள்.

தனுஷ் ரசிகர்கள் அறிவுரை

ரிக்கி ராதன் பண்டிட் பேச்சை கேட்டு அவசரப்பட்டு எந்த முடிவும் எடுக்க வேண்டாம் தனுஷ்ணா. விஜய்க்கு தலைமையை அடைய முடியாது என்று கணித்து சொன்னவர் இவர். தற்போது விஜய் முதல்வராகிவிட்டார். அதனால் எதையும் யோசித்து செய்யவும் என்கிறார்கள் ரசிகர்கள். ஒரு வேளை இந்த ரிக்கி ஏற்கனவே தனுஷை சந்தித்து பேசி தன் கணிப்பை சொன்ன தைரியத்தில் தான் அவர் அரசியலுக்கு வரலாம் என்று இருக்கிறாரோ என்று சினிமா ரசிகர்கள் சிலருக்கு சந்தேகம் வந்திருக்கிறது.

அஜித், விஜய்
தலைவர் கெரியர்
தனுஷ் பிறந்தநாள்

தனுஷ் அரசியலுக்கு வருவது குறித்து எதுவும் சொல்லவில்லை. இருந்தாலும் அவர் அதற்காக தான் தயாராகி வருகிறார் என்று மக்கள் நம்புகிறார்கள். நடிகர்கள் எல்லாம் கட்சி துவங்கி அரசியலுக்கு வர வேண்டும் என சட்டம் ஏதாவது இருக்கிறதா?. ஆளாளுக்கு கிளம்புகிறார்களே என்று பேசப்படுகிறது. இதற்கிடையே நடிகரும், தயாரிப்பாளருமான விஷால் கிருஷ்ணாவும் கூட அரசியலுக்கு வருவார் போன்றே என்று ரசிகர்கள் பேசிக் கொண்டிருக்கிறார்கள். இதற்கிடையே நேற்று தனது 43வது பிறந்தநாளை கொண்டாடினார் தனுஷ். 4ம் வகுப்பு படித்த வரை தன் பிறந்தநாள் என்று என அவருக்கு தெரியவே தெரியாதாம். ​

Source link