தனுஷ் கொடுத்த காமாட்சி விளக்கில் தாமரை சின்னம்: அரசியல் என்ட்ரிக்கு பாஜக சிக்னலா? சூடுபிடிக்கும் விவாதம் – dhanush women’s wing meeting bjp lotus symbol on kamakshi lamps and bjp politics critics

தனுஷ் வழங்கிய காமாட்சி விளக்குகளின் அடிப்பகுதியில் பாஜகவின் தாமரை சின்னம் பொரிக்கப்பட்டுள்ளது அரசியல் வட்டாரத்தில் கவனம் ஈர்த்துள்ளது. இது குறித்து விரிவாக பார்க்கலாம்.

சென்னை செம்மஞ்சேரியில் உள்ள தனியார் கல்லூரி வளாகத்தில் தனுஷ் நற்பணி இயக்கத்தின் மகளிர் அணி நிர்வாகிகள் சந்திப்பு பிரம்மாண்டமாக நடைபெற்றது. தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் வருகை தந்திருந்த சுமார் 3,000-க்கும் மேற்பட்ட மகளிர் அணி நிர்வாகிகளுடன் நடிகர் தனுஷ் தனித்தனியாகப் புகைப்படம் எடுத்துக்கொண்டார். அப்போது, அவர்கள் ஒவ்வொருவருக்கும் ஜிஆர்டி (GRT) நிறுவனத்திடமிருந்து வாங்கப்பட்ட வெள்ளி காமாட்சி அம்மன் விளக்குகளைத் தனது கைகளாலேயே பரிசாக வழங்கினார்.

தேர்தலுக்கு பின்னால் நடந்த சம்பவம்! உண்மை உடைத்த திமுக நிர்வாகி! – aandal priyadharshini

காமாட்சி விளக்கில் பாஜகவின் தாமரைச் சின்னம்?

பரிசு பெற்ற மகளிர் நிர்வாகிகள் அந்த விளக்கை ஆவலுடன் பார்த்தபோது, அதன் அடிப்பகுதியிலும் பின்பகுதியிலும் பாஜகவின் அதிகாரப்பூர்வ தேர்தல் சின்னமான ‘தாமரை’ போன்ற வடிவம் பொறிக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. இது கூட்டத்திற்கு வந்த மகளிர் நிர்வாகிகள் மற்றும் சமூக ஊடகங்களில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. நடிகர் தனுஷ் தனது அரசியல் வருகைக்கு பாஜக பாணியில் பிள்ளையார் சுழி போட்டுள்ளாரா என்ற கேள்வியை இது எழுப்பியுள்ளது.

ஜிஆர்டி வழக்கமான விளக்குகளில் இல்லாத சின்னம்

இந்த விவகாரம் குறித்து கள ஆய்வில் கிடைத்த தகவலின்படி, ஜிஆர்டி நிறுவனத்தில் பொதுவாக விற்பனை செய்யப்படும் 10 கிராம், 40 கிராம் அல்லது 50 கிராம் எடைகொண்ட எந்தவொரு வழக்கமான காமாட்சி அம்மன் வெள்ளி விளக்குகளிலும் இதுபோன்ற தாமரைச் சின்னம் இருப்பதில்லை. ஆனால், நடிகர் தனுஷ் தரப்பில் மொத்தமாக 3,000 விளக்குகள் ஆர்டர் செய்யப்பட்டு வாங்கப்பட்ட இந்தச் சிறப்பு விளக்குகளில் மட்டுமே திட்டமிட்டுத் தாமரைச் சின்னம் பொறிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால், தனுஷ் திட்டமிட்டே இந்தச் சின்னத்தைப் பொறிக்கச் சொல்லி பரிசளித்தாரா என்ற சந்தேகம் அரசியல் வட்டாரங்களில் வலுத்துள்ளது.

டெல்லி பயணம் & பாஜக தொடர்பு பின்னணி

நடிகர் தனுஷ் கடந்த சில தினங்களுக்கு முன்பாகத் திடீரென டெல்லிக்குச் சென்று பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் அமைப்பின் முக்கியப் புள்ளிகளைச் சந்தித்துப் பேசியதாகத் தகவல்கள் வெளியாகின. அவர் தனிக்கட்சி தொடங்குகிறாரா அல்லது பாஜகவின் ஆதரவுடன் களமிறங்குகிறாரா என்ற பரபரப்பான விவாதங்கள் நடைபெற்று வந்தன.

இத்தகைய அரசியல் சூழலில், செம்மஞ்சேரி கூட்டத்தில் தனுஷ் நேரடி அரசியல் கருத்துகள் எதையும் பேசாமல் நற்பணிகள் குறித்தும், பெண்கள் கல்வி குறித்தும் மட்டுமே பேசினார். ஆனால், அவர் பரிசளித்த காமாட்சி விளக்கில் பாஜகவின் தாமரைச் சின்னம் வெளிப்படையாக இடம்பெற்றிருப்பது, மேடைப் பேச்சை விட பல மடங்கு அதிர்வுகளை ஏற்படுத்தியுள்ளது.

Source link