தன்னிறைவு அடைய வேண்டும்!

தன்னிறைவு அடைய வேண்டும்!

‘ட்ரோன்’ உற்பத்திக்கான வலுவான கட்டமைப்பை நாம் உருவாக்க வேண்டும். ரஷ்யா – உக்ரைன், இஸ்ரேல் – ஈரான் ஆகிய நாடுகளுக்கு இடையே மோதல்கள், ட்ரோன் மற்றும் அதை எதிர்க்கும் தொழில்நுட்பங்களின் முக்கிய பங்கை நிரூபித்துள்ளன. எனவே, ட்ரோன் உற்பத்தியில் நாம் முழு தன்னிறைவு அடைவது அவசியம்.

ராஜ்நாத் சிங் ராணுவ அமைச்சர், பா.ஜ.,

சமூக ஊடகத்தில் ஆர்.எஸ்.எஸ்.,

சமூக ஊடகங்கள், மக்களால் பரவலாக பயன்படுத்தப்பட்டாலும், அவை ஒரு நல்ல நோக்கத்திற்காக பயன்படுத்தப்பட வேண்டும். அத்தகைய தளங்களில், ஆர்.எஸ்.எஸ்., அமைப்பினர் தங்களின் செயல்பாடுகளை அதிகரிக்க வேண்டிய அவசியம் உள்ளது. அதற்கு அதிகார பரவலாக்கம் தேவை.

மோகன் பாகவத் தலைவர், ஆர்.எஸ்.எஸ்.,

குடும்ப அமைப்பை வலுப்படுத்துங்கள்!

ஆந்திராவில் மக்கள் தொகையை அதிகரிப்பதுடன், குடும்ப அமைப்புகளையும் நாம் வலுப்படுத்த வேண்டும். முதியோருக்கு சிறந்த பராமரிப்பை உறுதி செய்யவும், சமூக நிலைத்தன்மையை மேம்படுத்தவும் கூட்டுக் குடும்ப அமைப்பை மீண்டும் உயிர்ப்பிப்பதற்கான முயற்சிகள் மேற்கொண்டு வருகிறோம்.

சந்திரபாபு நாயுடு ஆந்திர முதல்வர், தெலுங்கு தேசம் கட்சி

Source link