தமிழகத்தின் பொறுப்பு ஆளுநராக பதியேற்ற ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர்! – யார் இவர்? | Rajendra Arlekar Takes Charge as Acting Tamil Nadu Governor: Who Is He?

சிறை சென்ற அனுபவம்

இவரது தந்தை ஜனசங்கத்தின் கோவா மாநிலத் தலைவராக இருந்தவர். ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் ஆர்எஸ்எஸ் உடன் ஆரம்பத்தில் இருந்தே தொடர்பு கொண்டிருந்திருக்கிறார்.

பின்னர் 1989 ஆம் ஆண்டு பாரதிய ஜனதா கட்சியில் இணைந்து அரசியல் பணிகளில் தீவிரமாக செயல்பட தொடங்கினார்.

இந்தியாவில் எமர்ஜென்சி அறிவிக்கப்பட்டிருந்த 1975 முதல் 1977 வரை இருந்த காலகட்டத்தில் தனது தந்தையுடன் சேர்ந்து சிறை சென்ற அனுபவமும் இவருக்கு இருக்கிறது.

 ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர்

ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர்

கோவா சபாநாயகராக…

2002 முதல் 2007 ஆம் ஆண்டு வரை கோவா சட்டமன்ற உறுப்பினராக பணியாற்றியிருக்கிறார். மேலும் 2003 முதல் 2007 வரை கோவா மாநில பாஜக தலைவராகவும் பணியாற்றியிருக்கிறார்.

அதேபோல 2012 முதல் 2017 வரை கோவா சபாநாயகராக பதவி வகித்திருக்கிறார்.

அந்த சமயத்தில் கோவா சட்டமன்றத்தை இந்தியாவின் முதல் டிஜிட்டல் சட்டமன்றமாக அதாவது காகிதம் இல்லா சட்டமன்றமாக மாற்றியிருக்கிறார். இது இந்திய நாடாளுமன்ற ஜனநாயகத்தில் ஒரு மைல்கல்லாகக் கருதப்படுகிறது.

இமாச்சல், பீகார் மாநிலங்களின் ஆளுநராகவும் பதவி வகித்திருக்கிறார். தொடர்ந்து கடந்த ஆண்டு கேரள மாநிலத்தின் 23 ஆவது ஆளுநராகப் பதவியேற்ற இவர் தற்போது தமிழகத்தின் பொறுப்பு ஆளுராக பதவியேற்றிருக்கிறார்.!

Source link