சென்னை: அடுத்த 5 ஆண்டுகளில் தமிழகத்தின் வளர்ச்சிக்கான StalinStatement-ஐ இன்று அறிவிக்க இருக்கிறேன் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
அவரது அறிக்கை: மார்ச் 6: அண்ணாதுரை ஆட்சியில் அமர்ந்து தமிழினம் தலைநிமிர்ந்த நாள். 1967ம் ஆண்டு அண்ணாதுரை தலைமையிலான அமைச்சரவை பொறுப்பேற்று, தமிழகத்தின் எழுச்சிக்கும் தமிழினத்தின் மீட்சிக்கும் விதையூன்றிய இந்த நாளில், அடுத்த 5 ஆண்டுகளில் தமிழகத்தின் வளர்ச்சிக்கான StalinStatement-ஐ இன்று அறிவிக்க இருக்கிறேன்.
திராவிட ஆட்சி இம்மண்ணில் மையம் கொண்ட நாளிலேயே, திராவிட மாடல் 2.0-வுக்கான அடிக்கல்லை நாட்டுகிறேன்… உங்கள் அனைவரின் ஆதரவோடும். இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
