தமிழகத்தில் உள்ள எந்த முருகன் கோவிலுக்கு சென்று வழிபட்டால் என்ன பலன் கிடைக்கும் தெரியுமா?

தமிழகத்தில் அறுபடை முருகன் கோவில்கள் மட்டுமின்றி, பிரபலமான மற்றும் சக்தி வாய்ந்த பல முருகன் கோவில்கள் உள்ளன. ஒவ்வொரு திருக்கோவிலுக்கும் தனிச்சிறப்பும், வரலாறும், பக்தர்களின் நம்பிக்கைகளும் உள்ளன. பொதுவாக இந்த முருகன் கோவில்களில் வழிபட்டால் முருகப் பெருமானின் அருள் கிடைக்கும் என்றாலும், ஒவ்வொரு முருகன் கோவிலுக்கும் சென்று வழிபட்டால் ஒரு குறிப்பிட்ட தனித்துவமான பலன் நமக்கு கிடைக்கும் என சொல்லப்படுகிறது. அப்படி தமிழகத்தில் உள்ள பிரபலமான முருகன் கோவில்களில், எந்த கோவிலுக்கு சென்று பக்தர்கள் வழிபட்டால் என்ன பலன் கிடைக்கும் என்பது பற்றி தெரிந்து கொள்ளலாம்.

தமிழக முருகன் கோவில்களும் வழிபாட்டு பலன்களும் :

1. வடபழனி – குழந்தை பாக்கியம், தொழில் வளர்ச்சி

2. மருதமலை – சொந்த வீடு யோகம்

3. பழனி – கடன் தொல்லை நீங்கும்

4. திருச்செந்தூர் – எதிரிகள் தொல்லை, ராகு-கேது தோஷம் நீங்கும்

5. திருத்தணி – மனநிம்மதி கிடைக்கும், செவ்வாய் தோஷம் நீங்கும்

6. பழமுதிர்சோலை – குடும்ப ஒற்றுமை, மன நிம்மதி

7. சுவாமிமலை – கல்வி, ஞானம், குழந்தை வரம்

8. வயலூர் – நாக தோஷம் நீங்கும்

9. குன்றக்குடி – நோய் நீங்கும், தீராத வினைகள் தீரும்

10. திருப்பரங்குன்றம் – திருமண யோகம், வேலை

11. எட்டுக்குடி – பயம், எதிரிகள் தொல்லை, பாவம் விலகும், நினைத்த காரியம் நிறைவேறும். குழந்தை வரம், குடும்ப நலம்.

12. சிக்கல் – சிக்கல்கள் தீரும், குழந்தை வரம், தைரியம் மற்றும் வெற்றி கிடைக்கும்.

13. குன்றத்தூர் – திருமண தடை நீங்குதல், குழந்தை வரம், மனத்தெளிவு, நோய் மற்றும் பயம் நீங்குதல், சிவ வழிபாட்டு பலன்

14. சிறுவாபுரி – சொந்த வீடு, நிலம் யோகம், திருமண தடை நீங்குதல், வேலை மற்றும் தொழில் முன்னேற்றம், செவ்வாய் தோஷம் நிவர்த்தி

15. சென்னிமலை – செவ்வாய் தோஷ நிவர்த்தி, மன அமைதி, திருமண தடை நீங்குதல், அனைத்து காரியங்களிலும் வெற்றி.

16. விராலிமலை – வம்சவிருத்தி, கல்வி ஞானம், ஆயுள் பலம், நோய் மற்றும் துன்பங்கள் நீங்குதல், பாவ விமோசனம்.

17. தாண்டிக்குடி – குழந்தை வரம், திருமண தடை நீக்கம், நோய் மற்றும் வினைகள் தீரும்

18. எண்கண் – கண் நோய் நிவர்த்தி, செவ்வாய் தோஷம் மற்றும் குரு தோஷம் நீங்குதல், இழந்த செல்வம் பதவி பெறுவதல், பயம் நீங்கும், கல்வி வளர்ச்சி ஏற்படும்.

19. அனுவாவி – குழந்தை வரம், திருமண தடை நீங்குதல், உடல் மற்றும் மன நோய்கள் நீங்குதல், செல்வ வளமும் மன அமைதியும் அதிகரிக்கும்.

20. கந்தக்கோட்டம் – கடன் தொல்லை நீங்கும், கஷ்டங்கள் விலகும், மன அமைதி கிடைக்கும், தடைகள் விலகும், குழந்தைப்பேறு கிடைக்கும்.

இந்த முருகன் கோவில்களில் செவ்வாய்கிழமை, சஷ்டி, கிருத்திகை போன்ற நாட்களில் சென்று வழிபடுவது மிகவும் சிறப்புக்குரியதாகும். அதிகமான பக்தர்கள் தினமும் சென்று வழிபடும் இந்த முருகன் கோவில்களில் குறிப்பிட்ட வேண்டுதல்களுக்காக மனமுருகி முருகனிடம் முறையிட்டு, வழிபட்டால் நம்முடைய வேண்டுதல்கள் நிச்சயம் நிறைவேறும் என சொல்லப்படுகிறது. சஷ்டி போன்ற காலகட்டங்களில் இங்கு ஆயிரக்கணக்கில் பக்தர்கள் குவிவது வழக்கமாக உள்ளது. இந்த கோவில்களில் நம்முடைய வேண்டுதலுக்கு உரிய கோவிலுக்கு சென்று நேரடியாக வழிபட முடியாதவர்கள், இருக்கும் இடத்தில் இருந்தே முருகப் பெருமானை மனதார நினைத்து வேண்டிக் கொள்ளலாம். வேண்டுதல் நிறைவேறியதும் நேரில் சென்று, நேர்த்திக்கடன் நிறைவேற்றலாம்.

Source link