தமிழகத்தில் தேர்தல் நாளான ஏப்.23-ம் தேதி சம்பளத்துடன் விடுமுறை அளிக்காத நிறுவனங்கள் மீது நடவடிக்கை

சென்னை: தமிழகத்​தில் சட்​டப்​பேர​வைத் தேர்​தல் வாக்​குப்​ப​திவு நாளான ஏப்​.23-ம் தேதி தொழிலா​ளர்​களுக்கு சம்​பளத்​துடன் விடுமுறை அளிக்​காத தொழிற்​சாலைகள், நிறு​வனங்​கள் மீது நடவடிக்கை எடுக்​கப்​படும் என்று தமிழக தொழிலக பாது​காப்​பு, சுகா​தார இயக்​குநர் செ.ஆனந்த் எச்​சரிக்கை விடுத்​துள்​ளார்.

இதுதொடர்​பாக அவர் நேற்று வெளி​யிட்ட செய்​திக்​குறிப்​பில் கூறி​யிருப்​ப​தாவது: தமிழக சட்​டப்​பேரவை தேர்​தல் ஏப்​.23-ம் தேதி நடை​பெற உள்​ளது. மக்​கள் பிர​தி​நி​தித்​துவ சட்​டத்​தின்​கீழ், தமிழக தலை​மைத் தேர்​தல் அதி​காரி வெளி​யிட்​டுள்ள அறி​வுரைகளின்​படி, மாநிலத்​தில் உள்ள தொழிற்​சாலைகள், கட்​டு​மான நிறு​வனங்​கள் மற்​றும் அனைத்து பொதுத் துறை நிறு​வனங்​களில் பணி​யாற்​றும் தினக்​கூலி, தற்​காலிக பணி​யாளர்​கள், ஒப்​பந்த தொழிலா​ளர்​கள் உள்​ளிட்ட அனைத்து பணி​யாளர்​களும் வாக்​களிக்க வசதி​யாக தேர்​தல் நாளில் அவர்​களுக்கு சம்​பளத்​துடன் விடுப்பு வழங்​கு​வது கட்​டாய​மாகும்.

Source link