“தமிழகத்தில் பெரும்பான்மை கிடைக்காவிட்டால் விஜய்யுடன் பேசி என்டிஏ ஆட்சி அமைப்போம்”

பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: 5 மாநிலங்களில் சட்டப்பேரவை தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி, அசாமில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி இருக்கிறது. தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வராது. அங்கு நடிகர் விஜய்யும் போட்டியிடுகிறார்.

தேர்தலுக்குப் பிறகு அங்கு பெரும்பான்மை பலம் கிடைக்காவிட்டால் நடிகர் விஜய்யுடன் பேசி தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி அமைக்கும். மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜியை வீழ்த்திவிட்டு பாஜக ஆட்சி அமைக்கும்.

கேரளத்தில் இப்போது ஆளும் மார்க்சிஸ்ட் ஆட்சி மீது மக்கள் நம்பிக்கை இழந்துவிட்டனர். அங்கும் பாஜக ஆட்சி அமைக்கும். அதனால் தேர்தலுக்குப் பிறகு 5 மாநிலங்களிலும் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி அமைக்கும்.

Source link