தமிழகத்தில் வெயில் அதிகரிப்பு

சென்னை:தமிழகத்தில் நடப்பாண்டில் முதல் முறையாக, ஈரோடு, கரூர் பரமத்தி ஆகிய நகரங்களில், வெயில் 97.8 டிகிரி பாரன்ஹீட், அதாவது 37 டிகிரி செல்ஷியசை நேற்று எட்டியது.

தமிழகத்தில் குறிப்பிட்ட சில மாவட்டங்களில் மிதமான மழை; சில மாவட்டங்களில் அதிகாலை நேர பனிப்பொழிவு தொடர்கிறது.

பொதுவாக மார்ச் மாதம் பிற்பகுதியில் தான் வெயில் அதிகரிக்கும். ஆனால், இந்த ஆண்டு, பிப்., இறுதி வாரத்திலேயே, வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது.

நேற்று மாலை நிலவரப்படி, ஈரோடு, கரூர் பரமத்தி நகரங்களில் 97.8 டிகிரி பாரன்ஹீட் அதாவது, 37 டிகிரி செல்ஷியஸ் அளவுக்கு வெயில் பதிவானதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Source link