தமிழக அணி அபாரம் * 6 விக்கெட் சாய்த்த சச்சின் ரதி

திண்டுக்கல்: இந்திய கிரிக்கெட் போர்டு (பி.சி.சி.ஐ.,) சார்பில், சி.கே. நாயுடு கோப்பை (23 வயது) தொடர் நடத்தப்படுகிறது. திண்டுக்கல் மாவட்டம் நத்தம், என்.பி.ஆர்., கல்லுாரி மைதானத்தில், நேற்று துவங்கிய போட்டியில் தமிழகம், திரிபுரா அணிகள் மோதுகின்றன. ‘டாஸ்’ வென்ற திரிபுரா அணி பேட்டிங் செய்தது.

திரிபுரா அணிக்கு துவக்கம் சரியாக அமையவில்லை. நபாருன் 16, சாஹில் 18 ரன் எடுத்தனர். செந்து சர்கார் 84 ரன் எடுத்து ஆறுதல் தந்தார். மற்றவர்கள் கைவிட, திரிபுரா அணி முதல் இன்னிங்சில் 168 ரன்னில் ஆல் அவுட்டானது. அமித் அலி (27) அவுட்டாகாமல் இருந்தார். தமிழகத்தின் சார்பில் சச்சின் ரதி, அதிகபட்சம் 6 விக்கெட் சாய்த்தார்.

அடுத்து களமிறங்கிய தமிழக அணிக்கு அமித் சாத்விக், ஆதிஷ் (21) ஜோடி துவக்கம் தந்தது. அமித் அரைசதம் அடித்தார். முதல் நாள் முடிவில் தமிழக அணி முதல் இன்னிங்சில் 90/2 ரன் எடுத்து, 78 ரன் பின்தங்கி இருந்தது. அமித் (64) அவுட்டாகாமல் இருந்தார்.

Source link