தமிழக அணி ஏமாற்றம்

ராஞ்சி: இந்திய கிரிக்கெட் போர்டு சார்பில் 23 வயதுக்குட்பட்ட பெண்கள் அணிகளுக்கான ‘ஒன் டே’ டிராபி எலைட் தொடர் நடத்தப்படுகிறது. நேற்று ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் அரையிறுதி போட்டிகள் நடந்தன. தமிழக அணி, மகாராஷ்டிராவை எதிர்கொண்டது.

தமிழக அணிக்கு சுபாஹரிணி (32), ரினாஸ் (1) ஜோடி மோசமான துவக்கம் கொடுத்தது. கமலினி 16 ரன் மட்டும் எடுக்க, கேப்டன் ரோஷினி (6) மீண்டும் கைவிட்டார். பின் வரிசையில் ஜெனிதா (23) ஆறுதல் தந்தார். 45.2 ஓவரில் 125 ரன்னில் சுருண்டது தமிழகம்.

மகாராஷ்டிரா அணி 3 ஓவரில் 18/0 ரன் எடுத்த போது, மழையால் போட்டி கைவிடப்பட்டது.

லீக் சுற்றில் இரு அணிகளும் ‘சி’ பிரிவில் இடம் பெற்றன. இதில் 100 சதவீத வெற்றி பெற்றதன் அடிப்படையில் மகாராஷ்டிரா (ரன் ரேட் 1.338) பைனலுக்கு முன்னேறியதாக அறிவிக்கப்பட்டது. தமிழக அணி (லீக் சுற்றில் 1 தோல்வி, 0.859) வெளியேறியது.

மற்றொரு அரையிறுதியில் கர்நாடக அணி (25.5 ஓவர், 135/3), 7 விக்கெட் வித்தியாசத்தில் மும்பையை (41.3 ஓவர், 134/10) சாய்த்து, பைனலுக்குள் நுழைந்தது.

Source link