தமிழக அரசுக்கு 'ஜாக்டோ – ஜியோ' சங்கத்தினர் கெடு

சென்னை: ‘சட்டசபை தேர்தல் அறிவிப்பு வெளியிடுவதற்கு முன்பாக, வழிகாட்டு நெறிமுறைகளை அரசு வெளியிட வேண்டும்’ என ‘ஜாக்டோ – ஜியோ’ சங்கத்தினர் தமிழக அரசுக்கு கெடு விதித்துள்ளனர்.

அரசு ஊழியர்கள்,
ஆசிரியர்கள் சங்கங்களின் கூட்டமைப்பான ‘ஜாக்டோ – ஜியோ’ மாநில
ஒருங்கிணைப்பாளர்கள் காந்திராஜ், சுரேஷ் ஆகியோரது அறிக்கை:
முதல்வர்
ஸ்டாலின், உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டத்தை கடந்த ஜனவரி 3ம் தேதி
அறிவித்தார். அதை தொடர்ந்து, 9ம் தேதி அரசாணை வெளியிடப்பட்டது. இந்த
ஓய்வூதிய திட்டத்தை அறிவித்த முதல்வருக்கு, ஜாக்டோ – ஜியோ சார்பாக நன்றி
அறிவிப்பு மாநாடு பிப்., 8ல் சென்னையில் நடத்தப்பட்டது.

சட்டசபை தேர்தல்
அறிவிப்பை, மார்ச் முதல் வாரத்தில் தேர்தல் கமிஷன் வெளியிடும் என
எதிர்பார்க்கப்படுகிறது. முதல்வரால் அறிவிக்கப்பட்ட உறுதியளிக்கப்பட்ட
ஓய்வூதிய திட்டத்திற்கான விதிகள், வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடுவதில்
தாமதம் ஏற்பட்டுள்ளது. சட்டசபை தேர்தல் அறிவிப்பு வெளியிடுவதற்கு முன்பாக,
வழிகாட்டு நெறிமுறைகளை அரசு வெளியிட வேண்டும். இவ்வாறு அதில்
கூறப்பட்டுள்ளது.

Source link