சென்னை: சட்டப்பேரவை தேர்தலுடன் சேர்த்து உள்ளாட்சித் தேர்தலையும் நடத்தக்கோரி தொடரப்பட்ட மனு வாபஸ் பெறப்பட்டதால், வழக்கை தள்ளுபடி செய்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திருவள்ளூரைச் சேர்ந்த வழக்கறிஞர் சிவகுமரன், சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனுவில், “தமிழகத்தில் 27 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான பதவிக்காலம் கடந்த ஜனவரியுடன் முடிவடைந்து விட்டது. எஞ்சிய மாவட்டங்களின் பதவிக்காலம் விரைவில் முடிவடையவுள்ளது. இந்நிலையில் தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுடன் உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலையும் சேர்த்து நடத்துவதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய்ந்து, உள்ளாட்சி தேர்தலையும் அறிவிக்க உத்தரவிட வேண்டும்.
