தமிழக சட்டம் ஒழுங்கு டி.ஜி.பி.யை மாற்றிய தேர்தல் ஆணையம்.. புதிய டி.ஜி.பி.யாக சந்தீப் ராய் நியமனம்

தமிழகத்தில் ஏப்ரல் 23 அன்று சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் மாநிலம் முழுவதும் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளது.

இந்த காலகட்டத்தில் மாநிலத்தின் குறிப்பிட்ட அதிகாரம் தேர்தல் ஆணையம் வசம் இருக்கும்.

இந்த சூழலில் தமிழக காவல்துறை சட்டம் ஒழுங்கு டிஜிபியை மாற்றம் செய்து தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

அதன்படி, தமிழக காவல்துறை சட்டம் ஒழுங்கு டிஜிபியாக சந்தீப் ராய் ரத்தோரை தேர்தல் ஆணையம் நியமனம் செய்துள்ளது.

1992 பேட்ச் ஐபிஎஸ் அதிகாரியான சந்தீப் ராய் ரத்தோர், தற்போது பயிற்சிக் கல்லூரி டி.ஜி.பி. ஆக இருந்து வந்தவர் ஆவார்.

இவரைதவிர்த்து தாம்பரம் காவல் ஆணையறாக சந்தீப்குமார் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

மேலும் சேலம் மாவட்ட ஆட்சியராக அருண் தம்புராஜ், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியராக விஷ்ணு மகாஜன் ஆகியோர் தேர்தல் ஆணையத்தால் நியமிக்கப்பட்டுள்ளனர்.

Source link