'தமிழக வேலைவாய்ப்பில் 75% தமிழக இளைஞர்களுக்கே…' – விஜய் கொடுத்த வாக்குறுதிகள்!

தவெக தலைவர் விஜய் வேட்பாளர் அறிமுக கூட்டத்தை நடத்தி வருகிறார். அந்தக் கூட்டத்தில், இளைஞர்களுக்கான சில வாக்குறுதிகளை விஜய் அறிவித்திருந்தார்.

Vijay
Vijay

இளைஞர்களுக்கென விஜய் அறிவித்த வாக்குறுதிகள்

போதைப்பொருள் இல்லா தமிழ்நாடு. போதைப்பொருளை தடுக்க கடும் சட்டங்கள் கொண்டு வரப்படும். பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் போதைப்பொருள் எதிர்ப்பு மன்றங்கள் அமைக்கப்படும்.

கல்வி உத்தரவாதம் திட்டம் : 12 ஆம் வகுப்புக்கு பிறகு பி.ஹெச்.டி வரை பிணையம் இல்லாமல் 20 லட்ச ரூபாய் வரை கடன் வழங்கப்படும்.

TRATA வாயிலாக அனைத்து மாநில அரசுப் பணிகளுக்கும் ஒரு நிலையான ஆட்சேர்ப்பு அட்டவணை வெளியிடப்படும்.

29 வயதுக்கும் மேல் வேலைவாய்ப்பு இல்லாத டிகிரி முடித்த இளைஞர்களுக்கு 4000 ரூபாயும் பாலிடெக்னிக் முடித்த இளைஞர்களுக்கு மாதம் 2000 ரூபாயும் இளைஞர் நல நிதியாக வழங்கப்படும்.

ஆண்டுதோறும் 5 லட்சம் இண்டர்ன் பணிகளை வழங்க அரசு தனியார் தொழில் நிறுவனங்கள் கூட்டாக இயங்கும். இதில் பட்டதாரிகளுக்கு மாதம் 10000 ரூபாயும் ஐ.டி படித்தவர்களுக்கு 8000 ரூபாய் சம்பளமாக அரசே வழங்கும்.

Vijay
Vijay

நேர்மையான தொழில்முனைவோரை உருவாக்கும் வகையில் 25 லட்ச ரூபாய் அளவுக்கு பிணையில்லா கடன் வழங்கப்படும்.

தமிழகத்தில் வேலைவாய்ப்பில் நம் இளைஞர்களுக்கே முன்னுரிமை. தனியார் நிறுவனங்களில் 75% தமிழர்களை பணியமர்த்தும் நிறுவனங்களுக்கு மாநில ஜி.எஸ்.டியிம் 2.5% மானியம் வழங்கப்படும். மின் கட்டணங்களில் 5% மானியம் வழங்கப்படும்.

ஒவ்வொரு கிராம ஊராட்சியிலும் முதல்வர் மக்கள் சேவை நண்பர் திட்டம் தொடங்கப்படும். இதன்மூலம் 5 லட்சம் இளைஞர்களுக்கு உள்ளூரிலேயே வேலைவாய்ப்பு வழங்கப்படும்.

தமிழ்நாடு இளைஞர் ஆலோசனைக் குழு அமைக்கப்படும். இளைஞர்கள் தங்களின் கருத்துகளை இதில் தெரிவிக்கலாம்.

தமிழ்நாட்டின் பாரம்பரியம் கலாசாரத்தை உலகளவில் பரப்ப நவீன படைப்பாளி பள்ளிகள் அமைக்கப்படும்.’ என்றார்.

Source link