தமிழ்நாடு வெதர்மேன் உள்மாவட்ட வானிலை அப்டேட்: அக்டோபர் 20 முதல் சென்னைக்கு மீண்டும் மழை – tamil nadu weatherman about chennai rains from oct 20 to 22 looks good with delta interior south

வட தமிழகத்தில் நல்ல மழை கொட்டி தீர்த்த நிலையில், தற்போது தென் மாவட்டங்களில் மழை பெய்த வண்ணம் இருக்கிறது. இதற்கிடையில் கோவையில் பெய்த மழையானது பெரிதும் பேசுபொருளாக மாறியுள்ளது. அடுத்தகட்டமாக சென்னைக்கு எப்போது மழை பெய்யும் என்ற கேள்விக்கு தமிழ்நாடு வெதர்மேன் பதிலளித்துள்ளார்.

அக்டோபர் 17ஆம் தேதி இரவு முதல் நள்ளிரவு வரை சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் கனமழை கொட்டி தீர்த்தது. 2023 மிக்ஜாம் புயலுக்கு பின்னர் இப்படி ஒரு மழையை வட தமிழகம் சந்தித்துள்ளது. அடுத்த நாள் சென்னைக்கு ரெட் அலர்ட் விடுத்த சூழலில், பெரிதும் ஏமாற்றம் அளித்தது. இடையில் சில நாட்கள் பிரேக் நாட்களாக மாறியிருக்கிறது. அப்படியெனில் அடுத்த ரவுண்ட் எப்போது தொடங்கும் என்ற கேள்வி எழலாம். இதற்கு தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் வெளியிட்டுள்ள செய்தியில், அக்டோபர் 20ஆம் தேதி இரவு முதல் மறுநாள் காலை வரை சம்பவம் காத்திருக்கிறது. மேலும் அக்டோபர் 21, 22 ஆகிய நாட்களிலும் நல்ல மழையை எதிர்பார்க்கலாம் எனப் பதிவிட்டுள்ளார்.

Source link