“தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சியை யாராலும் காப்பாற்ற முடியாது”

இந்த மோசமான சூழலைக் கேள்வி கேட்காமல் மவுனமாக இருக்க முடியாது. பொறுப்பாளர்கள், மாநிலத் தலைவர்,சட்டமன்ற கட்சித் தலைவர் மட்டுமே கட்சியல்ல. லட்சக்கணக்கான தொண்டர்களின் உணர்வும்,உழைப்புமே கட்சி. பட்டியல் வெளியானதும் விரிவாகப் பேசலாம். இதே விற்பனை அணுகுமுறையோடு தான் வேட்பாளர் தேர்வும் நடக்குமென்றால் தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சியை யாராலும் காப்பாற்ற முடியாது” இவ்வாறு ஜோதிமணி தெரிவித்துள்ளார். 

கடந்த 2021 சட்டமன்ற தேர்தலிலும் அரவக்குறிச்சி தொகுதியைத் திமுகவிடம் காங்கிரஸ் தலைமை விட்டுக்கொடுத்ததை ஜோதிமணி கடுமையாக எதிர்த்தார். இப்போதும் தனக்கு வேண்டியவர்களுக்கோ அல்லது தகுதியானவர்களுக்கோ தொகுதிகளை ஒதுக்காமல், தலைமை தன்னிச்சையாகச் செயல்படுவதாக அவர் கருதுவதாக தெரிகிறது.

Source link