சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக எம்பி தமிழச்சி தங்கப்பாண்டியன், கனிமொழி சோமு செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்தனர்.
அப்போது திமுக மாநிலங்களவை எம்.பி. கனிமொழி சோமு கூறியதாவது:-
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கனிமொழி, உதயநிதி குறித்து எடப்பாடி பழனிசாமி தரக்குறைவாக விமர்சிக்கிறார்.
தேர்தல் பிரச்சாரங்களில் தரக்குறைவாக பேசி வரும் எடப்பாடி பழனிசாமி மன்னிப்பு கேட்க வேண்டும்.
தேர்தல் களத்தில் பெண்கள் குறித்து எப்படி பேச வேண்டும் என்று ஒரு வரைமுறை இருக்கிறது.
தேர்தல் களத்தில் பிரச்சாரத்தில் ஈடுபட்ட எடப்பாடி பழனிசாமி தொடர்ந்து கனிமொழி குறித்து அவதூறாக பேசி வருகிறார்.
எடப்பாடி பழனிசாமி ஒரு நல்ல மனநல மருது்துவரை பார்த்து பரிசோதனை மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
