முதல்வர் ஸ்டாலினின் குடும்ப சொத்தாக தி.மு.க., மாறி வருகிறது. அக்கட்சியில் இளைஞர்களுக்கு வழிகாட்டுகிறேன் என உதயநிதி கூறுகிறார். ஐந்தாண்டு ஆட்சியிலும், கட்சியிலும் அவர் மட்டுமே துணை முதல்வர் பதவிக்கு வந்துள்ளார். அவர் தவிர, தி.மு.க.,வில் இளைஞர்கள் வேறு யாரும் முன்னேறியுள்ளனரா?
விருதுநகரில் இளைஞர்களை அழைத்து வந்து, ‘நீங்கள் உழையுங்கள்; நாங்கள் உயர்கிறோம்’ என மறைமுகமாக கூறி, குடும்ப ஆட்சியை உறுதி செய்துவிட்டு சென்றுள்ளார் உதயநிதி. ‘சவுடால் பேர்வழி’ என பழனிசாமியை வாய்க்கு வந்தபடி, தரம் தாழ்ந்து பேசுவதன் வாயிலாக உதயநிதி தரம் தாழ்ந்து போய் கொண்டிருக்கிறார்.
– உதயகுமார், முன்னாள் அமைச்சர், அ.தி.மு.க.,
