பல்வேறு மாவட்டங்களில் விபத்தால் காயமடைந்தும், திடீர் உடல்நலக் குறைவின் காரணமாகவும் நடக்க முடியாமல் பலர் வீட்டில் இருக்கின்றனர். அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்ற தேர்தல் ஜனநாயகத்தின் முக்கிய குறிக்கோளின் அடிப்படையில் அவர்களும் வாக்கு செலுத்த வேண்டும்.
அவர்களின் அடிப்படை உரிமை மீறப்படக் கூடாது. அதனால், உடனடியாக மேலும் சில திருத்தங்களைச் செய்து அனைவருக்கும் வாக்களிக்கும் உரிமையை உறுதிசெய்யும் விதமாக, அனைத்து மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கும் உடனடியாக ஒரு சுற்றறிக்கை அனுப்ப வேண்டும். இது தொடர்பாக இந்திய தேர்தல் ஆணையத்தின் கவனத்துக்குக் கொண்டு சென்று, நடைபெறவுள்ள 5 மாநில தேர்தல்களுக்கும் ஒரு முன்னுதாரணமாக, உடனடியாக அமல்படுத்த வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.
