தவெகவிற்கு செல்ல தான் அதிமுக எம்எல்ஏக்களை புதுச்சேரி ரிசார்ட்டில் தங்க வைத்ததாக சி.வி.சண்முகம் மீது அதிமுக மாவட்ட செயலாளர் பசுபதி குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார். இது குறித்து விரிவாக பார்க்கலாம்.
அதிமுகவில் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக போர் கொடி தூக்கியவர் சி. வி.சண்முகம். அதன் பிறகு அதிமுகவில் இருந்து விலகி செயல்பட்டு வருகிறார் இந்த சூழலில் விழுப்புரம் சட்டப்பற்று தொகுதிக்குட்பட்ட அதிமுகவில் சி.வி சண்முகத்திற்கு எதிராக உட்கட்சி மோதல் வெடித்துள்ளது. இந்த நிலையில் நேற்று முன்னாள் அமைச்சர் சி .வி.சண்முகத்தின் ஆதரவாளர் சுரேஷ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர் விழுப்புரம் மாவட்ட அதிமுக செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளருமான பசுபதி மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன் வைத்திருந்தார்.
விழுப்புரம் அதிமுகவில் வெடித்த உட்கட்சி மோதல்
இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இன்று விழுப்புரம் மாவட்ட அதிமுக அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த மாவட்ட செயலாளர் பசுபதி முன்னாள் அமைச்சர் சி.வி சண்முகம் மற்றும் அவரது ஆதரவாளர் சுரேஷ் பாபு குறித்து பல்வேறு குற்றச்சாட்டுகளை கூறினார். அப்போது அவர் கூறுகையில் கட்சிக்கும் பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கும் எதிராக செயல்பட்டதாக கூறி சிவி சண்முகம் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதை தொடர்ந்து, என்னை மாவட்ட செயலாளராக நியமித்தனர்.
திமுக பாஜக கூட்டணியா?நெருக்கடியில் திமுக? காரணம் இதுதானா?
அதன் பிறகு விழுப்புரம் மாவட்டத்தில் அதிமுக அமைப்பு வலுப்பெற்று வருகிறது. புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டதுடன் தினமும் நூற்றுக்கணக்கான மாவட்ட மக்கள் மாவட்ட அலுவலகத்திற்கு வந்து கட்சியில் இணைந்துள்ளன என்று கூறினார். மேலும் சென்னையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் விழுப்புரம் மாவட்டத்தில் இருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்று மாநில அளவில் முதலிடம் பெற்றனர். இதை பொறுத்துக் கொள்ள முடியாமல் சி.வி. சண்முகம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் என் மீது தொடர்ந்து அவதூறுகளை பரப்பி வருகிறார்கள்.
எம்எல்ஏ ரிசார்ட் சர்ச்சை
மேலும் சுரேஷ் பாபு கூறியுள்ள கருத்துக்கள் அனைத்தும் ஆதாரம் அற்றவை என்று கூறினார். சுரேஷ் பாபு கடந்த காலங்களில் திமுக நிர்வாகிகள் உடன் தொடர்பில் இருந்த தேர்தல் நேரத்தில் பணம் பெற்று கற்றுக்கு எதிராக செயல்பட்டதாக பரபரப்பு குற்றச்சாட்டை முன் வைத்தார். அது மட்டுமின்றி 2021 சட்டமன்ற தேர்தலில் இப்பொழுது முன்னாள் அமைச்சர் பொன்முடியை சந்தித்து அதிமுக வேட்பாளர்களுக்கு எதிராக செயல்பட்டதாகவும் கூறினார். அதன் பிறகு 2021 சட்டமன்ற தேர்தலில் சண்முகம் தோல்வி அடைந்ததற்கு பிறகு சுரேஷ்பாபு காரணம் என்று கூறினார்.
வெளிநாடுகளில் முதலீடு
தொடர்ந்து பேசிய அவர் என்னை அரசியல் ரீதியாக ஒதுக்கி வைக்க சி.வி. சண்முகம் பல்வேறு முயற்சிகளை அதிமுகவில் மேற்கொண்டார். தேர்தல் மேடைகளில் பேச வாய்ப்பு மறுக்கப்பட்ட முக்கிய நிகழ்ச்சிகளில் அவமதிக்கப்பட்டு ஒரு காலத்தில் எடப்பாடி பழனிசாமி தலைமையை எதிர்த்து பேசியவர் தற்போது அவருக்கு ஆதரவாக செயல்படுவது அரசியல் சந்தர்ப்பவாதம் என்று கூறினார். மேலும் சி.வி சண்முகம் அமைச்சராக இருந்த காலத்தில் சொத்துக்குவிப்பு நடந்ததாகவும் வெளிநாடுகளில் முதலீடு செய்யப்பட்டதாகவும் அவர் குற்றம் சாட்டினர்.
உண்மைக்கு புறம்பானது
இது குறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும் என்றும் வலியுறுத்தியது பரபரப்பு ஏற்படுத்தியது அத்துடன் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்த எம்எல்ஏக்கள் பாண்டிச்சேரியில் தங்க வைக்கப்பட்ட விவகாரத்தில் தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் சிவி சண்முகம் மற்றும் அவரது சகோதரர் சிவி ராதாகிருஷ்ணன் செய்ததாக கூறினார். இத்தகைய சூழலில் எடப்பாடி பழனிசாமி மீது குற்றம் சுமத்துவது உண்மைக்கு புறம்பானது முழு விசாரணை நடத்தினால்தான் உண்மை வெளிச்சத்திற்கு வரும் என்று விழுப்புரம் மாவட்ட அதிமுக செயலாளர் இவ்வாறு கூறினார்.
Source link
