தவெக அமைச்சரவையில் மதிமுகவுக்கு இடம் உண்டா? வைகோ அளித்த பளிச் பதில் – 5 தொகுதி இடைத்தேர்தல் கணக்கு – vaiko statement will dmk get a ministerial post in vijay cabinet after five tamil nadu by-elections 2026

திருச்சி வந்த வைகோ, விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். மதுராந்தகம் மற்றும் தாராபுரம் இடைத்தேர்தலுக்கு பிறகு தவெக அமைச்சரவையில் மாற்றம் ஏற்பட்டால் அமைச்சரவையில் மதிமுக இடம்பெற வாய்ப்பு உள்ளதா என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.இதுகுறித்து வைகோ பேசுகையில், நாங்கள் இருக்கின்ற கூட்டணியில் எப்போதும் ஆரோக்கியமான அரசியலை நடத்தியிருக்கிறோம். தனிப்பட்ட முறையில் கூட்டணியில் இருந்து கொண்டு எந்த ஒரு சிபாரிசுகளும் செய்வதில்லை. இந்த அரசு இந்த குறுகிய காலத்திற்குள் அவர்களால் எது இயலுமோ அதை செய்து வருகிறார்கள். பிழை இருந்தால் அதனையும் திருத்திக் கொண்டு வருகிறார்கள். காலம் செல்ல செல்ல அனுபவம் பெற்று நிர்வாகத்தை இன்னும் சிறப்பாக நடத்துவார்கள் என்று நான் நம்புகிறேன் என்று கூறினார்.

தமிழ்நாட்டில் தவெக ஆட்சியில் விலைவாசி உயர்வு குறித்து கேள்விக்கு , விலைவாசி உயர்வு என்பது எல்லா காலத்திலும் நிகழக்கூடிய ஒன்று. அது இன்டர்நேஷனல் எகனாமிக் சிச்சுவேஷன். பணவீக்கத்தின் காரணமாக தான் விலைவாசி எல்லா இடங்களிலும் கூடிக் கொண்டு வருகிறது. அதனை மாநில அரசு உடனடியாக தடுத்து விட முடியாது என்று கூறினார்.

தர்மத்திற்காக அது குறித்து பொதுவெளியில் பேசவில்லை

மீதமுள்ள ஐந்து தொகுதி இடைத்தேர்தலில் மதிமுக சார்பில் நீங்கள் போட்டியிட வாய்ப்புள்ளதா என்ற கேள்விக்கு, இதனை முதலமைச்சர் விஜய்யும் கூட்டணியில் இருக்கக்கூடிய தலைவர்களும் தான் முடிவு செய்ய வேண்டும் என்று கூறினார். மேலும் இதுகுறித்து எந்த ஒரு கோரிக்கையும் நான் வைக்க மாட்டேன் என்றும் தெரிவித்தார்.

எம்ஜிஆர் ஆட்சிக் காலத்தில் இருந்தே கொலை குற்றங்கள் அடுத்தடுத்து வந்த ஒவ்வொரு ஆட்சி காலத்திலும் தொடர்ச்சியாக அதிகரித்து வந்தன. தற்போதும் அப்படித்தான் உள்ளது. முன்பு போல காவல்துறையினர் அதில் உடனுக்குடன் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். திமுக ஆட்சிக்காலத்தில் நடைபெற்ற பல்வேறு பிரச்சினைகள் தொடர்பாக கூட்டணி தர்மத்திற்காக நான் அது குறித்து பொதுவெளியில் பேசவில்லை. அதே நேரத்தில் உள்ளுக்குள் அதற்கு எதிராக குரல் கொடுத்து கொண்டிருந்தேன் என்று கூறினார்.

தவெக அமைச்சரவையில் மதிமுக வருவதில் சிக்கல்

வைகோ கூறுவது போல அவர்கள் தற்போது தவெக அமைச்சரவையில் இடம் பெற கோரிக்கை வைக்க மாட்டார்கள் என்பது உறுதியாகத் தெரிகிறது. காரணம் மதிமுகவிடம் தற்போது ஒரு எம்எல்ஏ கூட இல்லை. அவர்களுக்கு சட்டசபையில் இருக்கும் 2 எம்எல்ஏக்களும் கூட திமுக சின்னத்தில் நின்று வென்றவர்கள். இருவரும் தற்போது வைகோவுக்கு ஆதரவாகவும் இல்லை. திமுக ஆதரவு நிலைப்பாட்டில்தான் உள்ளனர்.

கடந்த சட்டசபைத் தேர்தலில் சொந்தச் சின்னத்தில் மதிமுக போட்டியிடவில்லை. இதுதான் வைகோவை கடும் வருத்தத்தில் ஆழ்த்தியது. இதனால்தான் தவெக அமைச்சரவையில் இடம் பெறும் வாய்ப்பையும் அக்கட்சி பறி கொடுத்தது. சொந்த சின்னத்தில் தாங்கள் போட்டியிட அனுமதி கொடுக்காததன் காரணமாகவே, வைகோ மற்றும் அவரது கட்சி நிர்வாகிகள் திமுக மீது கடும் அதிருப்தியில் இருந்தனர். அதுதான் திமுக கூட்டணியை விட்டு மதிமுக விலகவும் காரணமாக அமைந்தது.

இடைத் தேர்தலில் வைகோவுக்குப் போட்டியிட வாய்ப்பு?

திமுக கூட்டணியில் இருந்த போது வைகோவிற்கு சரியான மரியாதை கொடுக்கவில்லை என்று கூறப்பட்ட நிலையில், சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியமைத்த விஜய், வைகோவை வீடு தேடி சென்று வாழ்த்து பெற்றார். இதனை கண்டு நெகிழ்ந்த வைகோ தவெகவுக்கு தனது முழு ஆதரவையும் தெரிவித்தார். வைகோவின் மகனான திருச்சி எம்.பி. துரை வைகோவும் தீவிரமாக தவெகவை ஆதரித்துப் பேசி வருகிறார். திமுகவையும் கடுமையாக விமர்சித்து வருகிறார் என்பது நினைவிருக்கலாம்.ஒரு வேளை மீதமுள்ள 5தொகுதி இடைத் தேர்தலில் வைகோவுக்குப் போட்டியிட வாய்ப்பளிக்கப்பட்டால் அவர் நிச்சயம் அமைச்சராகப் பதவியேற்க வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது.

Source link