ஊத்தங்கரை தவெக MLA இளையராஜாவிடம் பேரம் பேசியதாக குற்றஞ்சாட்டப்பட்ட வழக்கு. கடந்த 8ம் தேதி முன்ஜாமின் கிடைத்த நிலையில், ஜாமின் தொகையான ரூ.25 ஆயிரத்தை செலுத்த சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்திற்கு செந்தில்பாலாஜி வருகை வந்தார். இது குறித்து விரிவாக பார்க்கலாம்.
முதலமைச்சர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றி கழக அரசை கவிழ்க்க ஊத்தங்கரை தவெக MLA இளையராஜாவிடம் குதிரை பேரம் நடந்ததாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது தம்பி அசோக்குமார் ஆகியோர் தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
தவெக எம்.எல்.ஏ குதிரை பேரம் வழக்கு
இந்த வழக்கில் விசாரணைக்கு ஆஜராக வேண்டி திருவல்லிக்கேணி காவல்துறையினர் கரூர் மாவட்டம் ராமேஸ்வரம் பட்டியில் உள்ள செந்தில் பாலாஜியின் வீட்டிற்கு சென்று அவரது பெற்றோர்களிடம் சம்மன் வழங்கினர். ஆனால் இருவரும் நேரில் ஆஜராகாதராகவில்லை. தலைமறைவாக இருந்த இருவரையும் தமிழகம் மற்றும் வெளி மாநிலங்களில் தேடும் பணியில் தனிப்படை காவல்துறையினர் ஈடுபட்டனர். மேலும் வெளிநாடுகளுக்கு தப்பில் செல்லாமல் இருக்க லுகவுட் நோட்டீஸ் வழங்கப்பட்டது.
திமுக பாஜக கூட்டணியா?நெருக்கடியில் திமுக? காரணம் இதுதானா?
ஜாமீன் வழங்கிய சென்னை உயர்நீதிமன்றம்
இதனைத் தொடர்ந்து , நாங்க தலைமறைவாகவில்லை என்று கூறி, இந்த வழக்கில் இருந்து விடுவிக்க கோரி செந்தில் பாலாஜி மற்றும் அசோக் குமார் ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கூறி மனுதாக்கல் செய்தனர். இந்த மனுவை விசாரித்த நீதிபதி இளந்திரையன் சில கடுமையான நிபந்தனைகளுடன் கடந்த 8-ஆம் தேதி இருவருக்கும் முன் ஜாமின் வழங்கினார்.
நீதிபதி செந்தில் பாலாஜிக்கு விதித்த நிபந்தனைகள்
அதன்படி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஆஜராகி 25 ஆயிரம் ரூபாய் தொகை கட்ட வேண்டும். அடுத்த உத்தரவு வரும் வரை தினமும் காலை 10:30 முதல் மாலை 5.30 மணிக்கு திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் ஆஜராகி இருவரும் கையெழுத்திட வேண்டும் . விசாரணை முழுமையாக விசாரணைக்கு முழுமையாக ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் மேலும் சாட்சிகள் அல்லது ஆதாரங்களில் எந்தவித தலையிடும் செய்யக்கூடாது . நிபந்தனைகளை மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று நீதிபதி தெரிவித்திருந்தார்
புதிய மனு தாக்கல்
இந்த நிலையில் விசாரணை என்ற பெயரில் போலீசார் தங்களை துன்புறுத்தக் கூடாது என்றும் முன்ஜாமின் பெற்றிருந்தாலும் வேறு வழக்கில் கைது செய்யப்படலாம் என்ற அச்சம் இருப்பதாக கூறி செந்தில் பாலாஜி மற்றும் அசோக் குமார் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் புதிய மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி இளந்திரையன் முன் ஜாமின் வழங்கப்பட்ட பிறகும் ஏன் நீதிமன்றத்தில் சரணடையவில்லை என்று கேள்வி எழுப்பினார் .
செந்தில் பாலாஜி நீதிமன்றத்திற்கு வருகை
இதுவரை சரணடையாத நிலையில் போலீசார் துன்புறுத்தக்கூடாது என்று எப்படி கூற முடியும் என்று கேள்வி எழுப்பினர் பின்னர் இருவரும் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
இந்த நிலையில், குதிரை பேரம் வழக்கில் உயர்நீதிமன்றம் விதித்த நிபந்தனையின்படி, ஜாமீன் தொகையான ரூ.25 ஆயிரத்தை செலுத்துவதற்காக திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி இன்று சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்திற்கு நேரில் வந்தார்.
நீதிமன்றத்தில் ஜாமீன் நடைமுறைகளை அவர் மேற்கொண்டார்.இந்த வழக்கு தொடர்பான அடுத்தகட்ட விசாரணையை போலீசார் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர்.
Source link
