தவெக தலைவர் விஜய் இன்று திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கிறார். திருநெல்வேலியில் நடந்த பொதுக்கூட்டத்தில் வேட்பாளர்களை அறிமுகப்படுத்தி திமுகவை கடுமையாக விமர்சித்து பேசியிருந்தார்.
விஜய் பேசியவை, “திமுக கையில் இந்நேரம் முழு பவரும் இருந்திருந்தால் இந்த நிகழ்ச்சி நடந்திருக்காது. எதாவது முட்டுக்கட்டை போட்டு என்னை வரவிடாமல் செய்திருப்பார்கள். திமுக அரசு எவ்வளவோ அவதூறுகளை நம் மீது பரப்பினார்கள்.
