தவெக தலைவர் விஜய் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி மனு

சென்னை: தவெக தலைவர் விஜய் மனைவி சங்கீதா, விவாகரத்து கோரி செங்கல்பட்டு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

நடிகரும், தவெக தலைவருமான விஜய், கடந்த 1999ம் ஆண்டு சங்கீதா என்பவரை காதலித்து கரம் பிடித்தார். நிச்சயதார்த்தம் லண்டனிலும் , திருமணம் 1999ம் ஆண்டுஆக., 25 ல் சென்னையில் நடைபெற்றது. இவர்களுக்கு ஜேசன் சஞ்சய் என்ற மகனும், திவ்யா என்ற மகளும் உள்ளனர். கடந்த சில ஆண்டுகளாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், திருமணம் முடிந்து 27 ஆண்டுகள் கழிந்த நிலையில் சங்கீதா, விவாகரத்து கோரி செங்கல்பட்டு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

பிப்.,24ம் தேதியே இந்த வழக்கை சங்கீதா செங்கல்பட்டு முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். தற்போது, இந்த வழக்கு செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டு விசாரணைக்கு ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.

சங்கீதா தொடர்ந்த இந்த வழக்கில் ஏப்.,20 ல் நேரில் ஆஜராக வேண்டும் என விஜய்க்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஒரு கட்சியின் தலைவராக தேர்தலை எதிர்கொள்ளவிருக்கும் நடிகர் விஜய்க்கு, இந்த விவகாரம் பெண் வாக்காளர்கள் மத்தியில் பின்னடைவாக இருக்கும் என்று கருதப்படுகிறது.

Source link