தவெக – பாமக கூட்டணி பேச்சுவார்த்தை? சர்ச்சைக்கு அமைச்சர் CTR நிர்மல்குமார் முற்றுப்புள்ளி! – minister ctr nirmal kumar puts an end to the controversy tvk-pmk alliance talks

மதுரை திருப்பாலை பகுதியில் அமைந்துள்ள யாதவா பெண்கள் கல்லூரியில் நடைபெற்று வரும் ரோட்டரி கிளப் நிகழ்ச்சியில் அமைச்சர் CTR நிர்மல்குமார் கலந்து கொண்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் நிர்மல்குமார் “கடந்த ஆட்சியில் பார்டி பண்ட் எங்கு வசூலிக்கப்பட்டது என தெரியும். அமைச்சருக்காக கட்டிங் கமிசன் கேட்டு வாங்கினார்கள் பெர்சன்டேஜ் போட்டு வாங்கினார்கள்.

பாமக – தவெக கூட்டணி

பாட்டிலுக்கு 10 ரூபாய் நிறுத்தப்பட்டது போல அனைத்து இடங்களிலும் பார்டி பண்ட் நிறுத்தியுள்ளோம் என்றார்.தகுதியின் அடிப்படையில் அரசு வழக்கறிஞர்கள் தற்காலிகமாக நியமிக்கப்பட்டுள்ளது. தரமான வழக்கறிஞர்கள் நியமனம் செய்யப்பட்டு லஞ்சம் லாவண்யம் இல்லாதவர்களை நியமித்து வருகிறோம் என்று கூறினார்.

சத்தமில்லாமல் சம்பவம் செய்யும் தவெக….கோட்டை விடும் அதிமுக?

மேலும் ஜனநாயக படத்தை பார்த்து அமைச்சர்கள் அழுவது குறித்த கேள்விக்கு?படம் எப்படி என மக்களுக்கு தெரியும் நம்ம முதலமைச்சர் 3 வருடம் பட்ட கஷ்டங்கள் ஜனவரியில் வந்தால் கூட இப்படி இருந்திருக்காது. தவெகவுடன் பாமக கூட்டணி என பேசி வருவது குறித்த கேள்விக்குபாமக கூட்டணி என்பது யூகத்தின் அடிப்படையிலான கேள்வி.மேகதாது அணை விவகாரத்தில் கர்நாடகாவிற்கு முதலமைச்சர் செல்வது ஆக்கப்பூர்வமான பணிகளை செய்ய வேண்டும்.

நீட் வேண்டாம் என்பதே நம் நிலைப்பாடு

சட்ட ரீதியானவற்றை விட்டுக்கொடுக்க போவதில்லை. நமது மாநிலத்தின் உரிமைகள் பாதுகாக்கப்படும்
நீட் விவகாரத்தில் நீட் வேண்டாம் என்பதே நம் நிலைப்பாடு ; தர்மேந்திர பிரதான் பதவி விலகினாலும் நீட் இருக்கும். நீட் தேர்வு வினாத்தாள் கசிந்த விவகாரத்தில் ஒன்றிய அரசு இதற்கு மன்னிப்பு கேட்க வேண்டும்.ரயில் மறியலில் ஈடுபட்டபோது மாணவர்களின் நலன்கருதி காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர்.அமைதியாக நடக்கும் போராட்டங்களுக்கு அனுமதி அளிக்கப்படுகிறது.

ஜனநாயகன் படத்திற்கு பின்னர் விஜய் நடிப்பாரா என்ற கேள்விக்கு?தலைவர் என்ன செய்ய போகிறார் என 20 வருடத்திற்கு முன்பே முடிவு செய்துவிட்டார் தற்போது அந்த முடிவிலும் மாற்றமில்லை. ஜனநாயகன் படத்தை மக்கள் சாதாரண படமாக பார்க்கவில்லை , 3 வருட கஷ்டங்களை பார்க்கின்றனர் என்று கூறினார். மேலும் நீட் தேர்வு எதிரான போராட்டத்தில் திமுக பங்கேற்பது குறித்த கேள்விக்கு திமுக இதுபோன்ற கேவலமான வேலை பார்க்க வேண்டாம், நீட் ரகசியம் குறித்து இப்போது வரை உதயநிதி ஸ்டாலின் பேசவில்லை.

தர்மேந்திர பிரதான் ராஜினாமா

உதயநிதிக்கு பாராளுமன்றம் என்றால் , சட்டமன்றம் என்றால் என்னவென்று தெரியாது.மாணவர்கள் போராட்டத்தில் ஸ்டிக்கர் ஒட்ட நினைத்தால் அசிங்கப்பட்டுதான் வருவார்கள் நீட் தேர்வு குறித்து பேச திமுகவிற்கு அருகதை இல்லை என்று கூறினார்.மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா குறித்த கேள்விக்கமத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்தது வரவேற்கதக்கது.இது ஒன்று மட்டுமே நீட்டுக்கான தீர்வல்ல; நீட் தேர்வே வேண்டாம் என்பது தான் நம் நிலைப்பாடு.

கண்டிப்பாக மாணவர்களின் போராட்டத்திற்கு ஒன்றிய அரசு செவிசாய்த்துள்ளது.லட்சக்கணக்கான மாணவர்கள் பாதிக்கப்பட்ட பிறகு ஒரு ராஜினாமவை மட்டும் வைத்து அதனை மூடி மறைக்க முடியாது.நீட் தேர்வால் பாதிக்கப்பட்ட மூன்று லட்சம் மாணவர்களுக்கு ஒன்றிய அரசின் பதில் என்ன? இதனை முன்பே செய்திருக்க வேண்டும்.ஒவ்வொரு வருடமும் தவறு நடந்தபிறகு அது மூடி மறைக்கப்படுகிறது.

இது மாணவர்களின் நியாயமான கோரிக்கைக்கு கிடைத்த வெற்றி.நீட் தேர்வு ஒன்றிய அரசின் தவறான கொள்கை முடிவு; கல்வி மாநில பட்டியலுக்கு வேண்டும் என்பது நமது கோரிக்கை, அதன் முதற்கட்டமாக ராஜினாமா நடந்துள்ளது.ஒன்றிய அரசு கல்வியை மாநில பட்டியலுக்கு மாற்ற வேண்டும், நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்றார்

Source link