ஆவணங்கள் அனைத்தும் சரியாக உள்ளது எனக் கூறி, சென்னை வில்லிவாக்கம் தவெக வேட்பாளர் ஆதவ் அர்ஜுனா வேட்புமனு ஏற்பு.
வில்லிவாக்கம் தொகுதியில் ஆதவ் அர்ஜுனாவின் வேட்புமனு நிறுத்தி வைக்கப்பட்டது. அவரது மனுவை ஏற்கக் கூடாது என சுயேச்சை வேட்பாளர்கள் தேவராஜன், முரளி வினோத் ஆகியோர் எதிர்ப்பு தெரிவித்தனர். அதாவது பிரமாண பத்திரத்தில் ஆதவ் மனைவியின் பெயரில் உள்ள 35 நிறுவனங்களின் பெயர்களை குறிப்பிடவில்லை என்றும், வருமான வரிக் கணக்கில் காட்டாமல் ஆதவ்விடம் ரூ.1 கோடி இருப்பதாகவும், ஆதவ் அர்ஜுனாவின் வைப்பு நிதியில் உள்ள ரூ.2 கோடிக்கு ரூ. 84 லட்சம் வரை வட்டி வருவதை அவர் வேட்பு மனுவில் குறிப்பிடவில்லை என்றும், 14 கோடி வருமானத்தை ஆதவ் மறைத்துள்ளார் என்றும், 1.69 கோடி ரொக்கமாக வைத்துள்ளார் என்றும் குற்றம் சாட்டப்பட்டிருந்தது.
இதனால் தேர்தல் கண்காணிப்பாளர் விக்ரம் குமார் சிங் வரும் வரை காத்திருக்குமாறு கூறி ஆதவ் அர்ஜுனாவின் வேட்புமனுவை தேர்தல் அலுவலர்கள் நிறுத்தி வைத்திருந்தனர். பின்னர் நடந்த பரிசீலனைக்கு பின்பு அவரது வேட்புமனு ஏற்கப்பட்டது.அவர் வேட்புமனுவில் அனைத்து விவரங்களும் சரியாக இருப்பதால் வேட்புமனு ஏற்கப்பட்டதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
