தாக்குதலுக்கு பின் ஈரான் கடும் எச்சரிக்கை!

குவைத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் தனது அதிகாரபூர்வ எக்ஸ் தளத்தில், “இன்று அதிகாலை மினா அல் அஹ்மதி சுத்திகரிப்பு நிலையம் ட்ரோன் தாக்குதல்களுக்கு உள்ளானதால், பல பிரிவுகளில் தீ விபத்து ஏற்பட்டதுடன், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அந்நிறுவனத்தின் சில பகுதிகள் மூடப்பட்டன. இந்த தாக்குதலில் எவருக்கும் காயம் ஏற்படவில்லை. ஆனால், நிலைமையைக் கட்டுப்படுத்த அவசரகாலக் குழுக்கள் தீவிரமாகச் செயல்பட்டு வருகின்றன” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்கா – இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையேயான போர் மூன்றாவது வாரத்தை எட்டியுள்ள நிலையில், புதன்கிழமை இரவு இஸ்ரேல், ஈரானின் தெற்கு பார்ஸ் எரிவாயு நிலையம் மீது தாக்குதல் நடத்தியது. இதற்குப் பதிலடியாக, கத்தாரின் ராஸ் லஃபான் தொழில்துறை நகரம் மீது ஈரான் தாக்குதல் நடத்தியதில், பெரும் சேதம் ஏற்பட்டது. பின்னர் வியாழக்கிழமை, வடக்கு இஸ்ரேலில் உள்ள மிகப்பெரிய ஹைஃபா எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தின் மீது ஈரானின் பாலிஸ்டிக் ஏவுகணைகள் தாக்குதல் நடத்தியது.

Source link