தாய்லாந்து பூங்காவில் 72 புலிகள் பலி தென் கிழக்காசிய நாடான தாய்லாந்தில் உள்ள இரண்டு உயிரியல் பூங்காக்களில்,

தாய்லாந்து பூங்காவில் 72 புலிகள் பலி

தென் கிழக்காசிய நாடான தாய்லாந்தில் உள்ள இரண்டு உயிரியல் பூங்காக்களில், கடந்த, 10 நாட்களில் மட்டும், 72 புலிகள் திடீரென உயிரிழந்துள்ளன.

சுற்று லாவுக்கு புகழ்பெற்ற இந்த பூங்காக்களில் ஏற்பட்டுள்ள இந்த பலி, மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், இது விலங்குகளுக்கு மட்டும் ஏற்படும் ஒருவகை வைரஸ் நோய் என்றும், மனிதர்களுக்கு பரவாது என்றும் தாய் லாந்து அரசு கூறியுள்ளது.

இருப்பினும், 72 புலிகள் இறப்பு தொடர்பாக தீவிர விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

பிரதமர் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்

ஆஸ்திரேலிய பிரதமர் ஆன்டனி அல்பனீஸ் வீட்டில் வெடிகுண்டு வைத்திருப்பதாக மிரட்டல் வந்தது.

இதையடுத்து, கான்பெராவில் உள்ள அரசின் அதிகாரப்பூர்வ வீட்டில் இருந்து அல்பனீஸ் உள்ளிட்டோர் வெளியேற்றப்பட்டனர். நீண்ட நேரம் தீவிர சோதனை நடத்தப்பட்டதில் அது புரளி என்பது தெரியவந்தது.

கட ந்த ஓராண்டில், பிரதமர் மற்றும் அமைச்சர்கள் வீடுகளில் குண்டு வைத்ததாக பல மிரட்டல்கள் வந்துள்ளன. இது தொடர்பாக, 20 பேர் கைது செய்யப் பட்டுள்ளனர்.

Source link