பேஷன் ஸ்டுடியோஸ் மற்றும் சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் அறிமுக இயக்குநர் சிவக்குமார் முருகேசன் இயக்கத்தில் கடந்த 27ஆம் தேதி வெளியான படம் ‘தாய் கிழவி’. இப்படத்தில் ராதிகா சரத்குமார் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் சிங்கம் புலி, அருள்தாஸ், பால சரவணன், முனீஸ் காந்த், இளவரசு, ஜார்ஜ் மரியான், முத்துக்குமார், ரெய்ச்சல் ரெபேக்கா உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
இப்படத்திற்கு நிவாஸ் கே பிரசன்னா இசையமைத்துள்ளார். பெண்களின் மேம்பாடு குறித்து பேசிய இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. குறிப்பாக பவுனு தாயாக நடித்த ராதிகாவின் நடிப்பு பலராலும் பாராட்டப்பட்டது. இப்படம் வசூல் ரீதியாக 10 நாட்களில் ரூ.50 கோடியை கடந்தது. பின்பு 25 நாட்களில் ரூ.75 கோடியை கடந்தது.
இந்த நிலையில் இப்படத்தின் ஓடிடி அப்டேட் தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி ஏப்ரல் 10ஆம் தேதி ஜியோ ஹாட்ஸ்டாரில் வெளியாகிறது. அதே தினம் இந்தியாவைத் தாண்டி உலகம் முழுவதும் சிம்ப்ளி ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது. திரையரங்கில் நல்ல வரவேற்பை பெற்றதால் ஓடிடியிலும் அதே வரவேற்பை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Thaaikizhavi Jiohotstar la vasool panna vanthukirukka 🔥🥳#ThaaiKizhavi streaming from April 10 only on #JioHotstar#ThaaiKizhaviOnJioHotstar#ThaaiKizhaviStreamingFromApril10#JioHotstarTamil@Siva_Kartikeyan@Sudhans2017@KalaiArasu_@SKProdOffl@PassionStudios_… pic.twitter.com/t8HReTkO2F
— JioHotstar Tamil (@JioHotstartam) March 30, 2026
