திண்டுக்கல்: விஜய் கூட்டத்திற்கு தேர்தல் கமிஷன் அனுமதி மறுப்பதை வேண்டுமென்றே திமுகவிற்கு எதிராக திசை திருப்புகிறார்கள் என விடுதலை சிறுத்தை கட்சித் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
திண்டுக்கல்லில் நிருபர்களிடம் திருமாவளவன் கூறியதாவது: தற்போது பிரசாரங்களுக்கு அனுமதி வழங்கிய அதிகாரம் தேர்தல் கமிஷனுக்கு மட்டுமே உண்டு. அந்த இடங்களில் தமிழக அதிகாரிகள் இருக்கலாம். ஆனால் தேர்தல் கமிஷன் அவர்களை வழிநடத்துகிறது.
எனவே விஜய்க்கு பிரசாரம் செய்வதற்கு போலீசார் அனுமதி மறுக்கிறார்கள் என்றால் அதற்கு திமுக அரசு அல்லது திமுக தலைமையில் உள்ள அமைச்சரவையில் உள்ள அமைச்சர்கள், திமுக பொறுப்பாளர்கள் யாரும் காரணமாக இருக்க முடியாது.
வேண்டுமென்றே அதை திமுகவிற்கு எதிராக திருப்ப பார்க்கிறார்கள். மக்கள் அரசியல் அறியாதவர்கள் இல்லை. மக்களை அவர்களால் ஏமாற்ற முடியாது. இவ்வாறு திருமாவளவன் கூறினார்.
