திமுகவில் உதயநிதிக்கு எதிராக வெடித்த பிரச்சனை..? கேள்வி எழுப்பும் நிர்வாகிகள்- மு.க. ஸ்டாலின் அதிருப்தி – dmk functionaries are dissatisfied with udhayanidhi for not personally meeting the arrested mlas

திமுக எம்.எல்.ஏக்கள் அடுத்தடுத்து முதலமைச்சர் விஜய் விமர்சித்து கைது செய்யப்பட்டு வரும் நிலையில், அவர்களை எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் சந்திக்காதது அக்கட்சியில் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளதாக அரசியல் வட்டாரத்தில் கூறப்படுகிறது. இது குறித்து இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.

நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் விஜயின் தமிழக வெற்றிக்கழகம் வெற்றி பெற்று தமிழக முதலமைச்சராக விஜய் பொறுப்பேற்று பல்வேறு அரசியல் நடவடிக்கைகள் ஈடுபட்டு வருவது கவனம் பெற்றுள்ளது. இந்த சூழலில் சமீபத்தில் நடந்த சட்டப்பேரவை கூட்டத் தொடரில் மறைமுகமாக திமுக தலைவர் மு.க. ஸ்டாலினை அப்பாவை காணும் என்று விமர்சித்திருந்தார். இது திமுகவினர் இடையே கடும் கோபத்தை ஏற்படுத்தியது.

முதலமைச்சர் விஜய் விமர்சனம்

இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் திமுக எம்எல்ஏக்கள் பொதுக்கூட்டங்களில் முதலமைச்சர் விஜய் கடுமையாக விமர்சித்து பேசி வருகின்றனர். அந்த வகையில் அண்மையில் தூத்துக்குடியில் முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் முதலமைச்சரை ஒருமையில் பேசி இருந்தது தொடர்பாக கடந்த ஜூலை 3 ஆம் தேதி கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமினில் விடுவிக்கப்பட்டார். இந்த நிலையில் விளாத்திகுளம் சட்டமன்ற எம்எல்ஏ மார்க்கண்டேயின் விஜயின் எலும்பு உடைப்போம் என்று பேசியது தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

Work ஆகுமா பொது வேட்பாளர் Concept? திமுக போடும் கணக்கு Discussed!

திமுக எம்எல்ஏக்கள் கைது

இந்த இரண்டு சம்பவங்களும் திமுக தலைவர் ஸ்டாலின் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினும் கண்டனம் தெரிவித்து அறிக்கை மட்டுமே வெளியிட்டு முடித்துக் கொண்டனர் .ஆனால் சொந்த கட்சி எம்.எல்.ஏக்களுக்கு இந்த நிலைமையா என அக்கட்சியில் அதிருப்தி அதிகரித்துள்ளதாக அரசியல் வட்டாரத்தில் கூறப்படுகிறது. கட்சி தலைமையில் இருந்து ஆதரவு இல்லை என்றால் தமிழக வெற்றி கழக அரசுக்கு எதிராக திமுகவை சேர்ந்தவர்கள் பேசவே மாட்டார்கள். ஏன் 3 வது கட்சியாக இருக்கும் அதிமுகவும் கூட போராட்டங்களை நடத்தி வருகிறது.

புலம்பி தவிக்கும் திமுகவினர்

ஆனால் எதிர்க்கட்சி தலைவராக இருக்கும் உதயநிதி ஸ்டாலின் இதுவரை எம்எல்ஏக்களுக்கு ஆதரவாக களத்தில் இறங்காமல் வெறும் அறிக்கையை மட்டுமே வெளியிட்டு வருவதாக திமுக வினர் புலம்பி வருவதாக கூறப்படுகிறது. இந்த விவகாரம் குறித்து திமுக வட்டாரத்தில் கேட்டபோது கடந்த திமுக ஆட்சியின் போது சிவகங்கை மாவட்டம் திருபுவனத்தில் போலீஸ் காவலில் இருந்த காவலாளி அஜித்குமார் உயிரிழந்ததற்கு எதிராக முதலமைச்சர் ஆவதற்கு முன்பு தமிழக வெற்றிக்கழகம் சார்பில் சென்னையில் போராட்டம் நடத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து சமீபத்தில் நாகர்கோவிலில் நீதிமன்ற காவலில் உயிரிழந்த சபரி வர்மனுக்கு ஆதரவாகவும், தவெக அரசை கண்டித்து திமுக சார்பில் போராட்டம் நடத்தப்பட்டது.

களத்திற்கு வராத உதயநிதி

இதற்கும் எதிர்க்கட்சி தலைவராக உள்ள உதயநிதி ஸ்டாலின் வரவில்லை. சென்னை அருகே உள்ள கும்மிடிப்பூண்டியில் மூன்று வயது குழந்தை பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டு முட்புதரில் தூக்கி வீசப்பட்ட சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இது தொடர்பாகவும் திமுக சார்பில் போராட்டம் நடத்தப்பட்டது ஆனால் இதற்கும் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொள்ளவில்லை.

திமுகவில் மு.க.ஸ்டாலினுக்கு பிறகு உதயநிதி ஸ்டாலின் தான் என்ற முகமாக முன்னிறுத்தப்படுகிறது. இப்படி இருக்கையில் எதிர்க்கட்சி தலைவர் களின் பொறுப்பை உணராதமல் இருந்தால் அவரை எப்படி நம்பி கட்சி என களத்தில் இறங்குவார்கள் என்று திமுகவில் புலம்பல் சத்தம் அதிகமாக இருப்பதாக அரசியல் வட்டாரத்தில் கூறப்படுகிறது. இதனால், திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் மற்றும் முன்னாள் அமைச்சர்கள் தொடர்ந்து உதயநிதிக்கு அரசியல் நகர்விகள் குறித்து விளக்கம் அளித்து வருவதாக கூறப்படுகிறது.

Source link