திமுகவில் களமிறங்கியுள்ள வாரிசுகள்

சென்னை: திமுகவில் இந்த முறையும் உதயநிதி, பொன் கவுதம சிகாமணி, டிஆர்பி ராஜா உள்ளிட்ட வாரிசு அரசியல்வாதிகளுக்கு மீண்டும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

திமுகவில் வாரிசு அரசியல் நடத்துவதாக பிரதமர் மோடி, அதிமுக பொதுச்செயலர் இபிஎஸ் உள்ளிட்டோர் கடும் விமர்சனம் செய்து வருகின்றனர்.

இந்நிலையில், இன்று முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட வேட்பாளர் பட்டியலிலும் பல வாரிசுகளுக்கு இந்த முறையும் வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.

அதன்படி,

முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மகன் – ஸ்டாலின்( கொளத்தூர்)

முதல்வர் ஸ்டாலின் மகன்- உதயநிதி (சேப்பாக்கம்)

முன்னாள் அமைச்சர் தங்கப்பாண்டியன் மகன் – தங்கம் தென்னரசு( திருச்சுழி)

முன்னாள் அமைச்சர் பொன்முடியின் – மகன் பொன் கவுதம சிகாமணி ( திருக்கோவிலுார் )

திமுக எம்பியும், பொருளாளருமான டிஆர்பாலு – டிஆர்பி ராஜா (மன்னார்குடி )

அமைச்சர் ஐ.பெரியசாமியின் மகன் -ஐ.பி செந்தில்குமார் (திண்டுக்கல்)

முன்னாள் சபாநாயகர் பழனிவேல்ராஜன் மகன்- பிடிஆர் தியாகராஜன் ( மதுரை மத்தி)

முன்னாள் எம்எல்ஏ பொய்யாமொழி மகன் – மகேஷ் ( திருவெறும்பூர்)

முன்னாள் எம்எல்ஏ ஜெ.அன்பழகன் மகன் – ராஜா அன்பழகன் (தி.நகர் )

அமைச்சர் காந்தி மகன் : வினோத் காந்தி (ராணிப்பேட்டை)

முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்தின் மருமகன் தருண்( வீரபாண்டி)

திமுக எம்எல்ஏ மோகன் மகன் கார்த்திக்( வில்லிவாக்கம்)

தூத்துக்குடி முன்னாள் எம்எல்ஏ பெரியசாமி மகள் கீதா ஜீவன்( தூத்துக்குடி) ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

Source link