2026 சட்டசபை தேர்தல் மற்றும் கொளத்தூர் தொகுதியில் மு.க. ஸ்டாலின் தோல்வி என அடுத்தடுத்து திமுக சரிவை நோக்கி நகர்ந்தது. தேர்தல் தோல்வி குறித்து ஆராய்ந்த போது தான் மாவட்ட செயலாளர் மற்றும் நிர்வாகிகள் யாரும் சரிவர வேலை செய்யவில்லை என்பது தெரிய வந்தது. மேலும் உடல்நிலை காரணமாக கட்சி சீரமைப்பு பணிகள் மற்றும் ஊர் ஊராக சென்று மு.க .ஸ்டாலினால் பிரச்சாரம் செய்ய முடியாமல் போனதும் திமுகவின் தோல்விக்கு காரணம் என்பதும் தெரியவந்தது.
திமுக கட்சியில் கட்டமைப்பதில் தீவிரம்
இந்த சூழலில், தான் திமுகவை மீண்டும் கட்டமைக்கும் முயற்சியில் கட்சி தலைமை ஈடுபட்டது. அதன்படி மாவட்ட செயலாளர்களுக்கு 70 வயது நிர்ணயம், இளைஞர்களுக்கு முக்கியத்துவம் அளிப்பது, பொறுப்பாளர்களில் நியமிப்பதற்கு தேர்வு அடுத்தடுத்த நடவடிக்கைகளில் தீவிரம் காட்டியது.
ஆனால் மூத்த நிர்வாகியகள் வயது நிர்ணயத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். உதயநிதி ஸ்டாலின் எதிர்க்கட்சித் தலைவராக பொறுப்பேற்ற பிறகு,திமுகவில் சீனியர்கள் ஓரங்கட்டப்படுகிறார்களா என்ற அதிருப்தி இருந்து வருவதாக கூறப்படுகிறது.
கண்டுக்கொள்ளாத உதயநிதி ஸ்டாலின்
இப்படியான சூழலில், நடந்து முடிந்த மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தல்திமுகவின் ஓட்டு சதவீதம் அதிகரித்து மூன்றாம் இடத்தில் இருந்த நிலையில், தற்போது இரண்டாம் இடத்திற்கு முன்னேறி உள்ளது. இது சட்டசபை தேர்தலை காட்டிலும் இடைத்தேர்தலில் 33 சதவீத வாக்குகளை பெற்றிருந்தது.உதயநிதி ஸ்டாலினோ தமிழக வெற்றிக்கழக அரசுக்கு எதிராக குதிரை பேர வழக்குகள், சட்ட ஒழுங்கு பிரச்சனை, நிர்வாக சீர்கேடு என அனைத்துக்கும் அறிக்கை வாயிலாகவே தனது கண்டனங்களை தெரிவித்து வந்தார். மறுபுறம்,கனிமொழி முக்கிய பிரச்சனைகளுக்கு மட்டுமே கண்டனங்களை செய்தியாளர் சந்திப்பு மற்றும் பொதுக்கூட்டங்கள் வாயிலாகவே தெரிவித்து வருகிறார்.இதனால் திமுகவில் உதயநிதி ஸ்டாலின் தலைவர் ஸ்டாலின் இருந்ததை போல் ஆக்டிவாக இல்லை என்று மூத்த நிர்வாகிகள் இடையே பேச்சுகள் அடிப்பட்டு வருகிறது.
உதயநிதி ஸ்டாலின் மீது மூத்த நிர்வாகிகள் அதிருப்தி
இதனை தோல்வியிலும் வெற்றி என்று மு க ஸ்டாலின் குறிப்பிட்டு இருந்தார். மேலும் தமிழக வெற்றிக்கழகம் மற்றும் அதிமுக உள்ளிட்ட இரு பெரும் கட்சிகள் சவாலாக இருந்த போதிலும் இந்த வாக்கு சதவீதம் திமுகவினருக்கு உற்சாகத்தையும், மக்கள் மத்தியில் திமுகவின் செல்வாக்கு குறையவில்லை என்று நிரூபிக்கும் வகையில் இருந்தது. இந்த வாக்கு சதவீங்களின் வெற்றியை வைத்து எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தனது கட்சி நிர்வாகிகளிடமோ, அடிமட்டத் தொண்டர்கள் வரை சரியாக சென்று சேர்க்கவில்லை என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டு வருகிறது. மேலும், இடைத்தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்று முனைப்புடன் முதலமைச்சர் விஜய் தெருதெருவாக சென்று ஓட்டு கேட்டார் . ஆனால் உதயநிதி ஸ்டாலினும், காரை விட்டு இறங்காமல் பிரச்சார மேற்கொண்ட மேலும் கடந்த 3ம் தேதி இடைத்தேர்தல் பிரச்சாரத்திற்கு பிறகு பொதுவெளியில் உதயநிதி ஸ்டாலினை காண முடியவில்லை என கட்சியின் மூத்த நிர்வாகிகள் அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது.
களத்திற்கு எப்போதுதான் வருவார்..
இந்த சூழலில் தமிழக வெற்றிக்கழக அரசுக்கு எதிராக மின் கட்டண உயர்வு விலைவாசி உயர்வு சட்ட ஒழுங்கு பிரச்சினை உள்ளிட்ட ஏராளமான பிரச்சனைகள் எதிராக எதிர்க் கட்சியாக இருக்கக்கூடிய திமுக கையில் எடுத்து தீவிரமாக பிரச்சாரம் செய்ய வேண்டிய நிலையில் உள்ளது.
ஆனால் இதற்கு உதயநிதி ஸ்டாலின் கேலி செய்தும் கிண்டல் செய்தும், அறிக்கைகள் மட்டுமே கொடுத்து வருகிறார். களத்திற்கு இன்னும் வரவில்லை இதனால் ஆளுங்கட்சிக்கு எதிராக வெறும் குற்றச்சாட்டை கூறிவிட்டால் மட்டும் போதுமா ?
பிரச்சினைகளுக்கு எதிராக தளத்தில் வந்து போராடவிட்டால் மக்கள் எப்படி நம்மை நம்புவார்கள் என்று மூத்த நிர்வாகிகள் கேள்வி எழுப்பி வருவதாக கூறப்படுகிறது.
திமுகவின் அடுத்தகட்ட சவால் என்ன?
இந்த சூழலில் 5 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் எப்போது வரலாம் என்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கூறி வருகிறார். இத்தகைய சூழலில் விஜய் கூடும் இடங்களில் எல்லாம் கூட்டம் தானாகவே கூடுகிறது. திமுக விற்கும் கட்சி நிர்வாகிகள் கூடினாலும் பெண்கள் மற்றும் இளைஞர்களை ஈர்ப்பதில் கவனம் செலுத்த வேண்டிய நிலை உள்ளது. இளைஞர்கள் ,பெண்களை வாக்குகளை ஈர்ப்பதற்கு விஜய் , தனுஷ் என போட்டி போட்டுக்கொண்டு இருக்கிறார்கள்.
மேலும் 5 தொகுதிகளுக்கு இடைத்தேர்தள் பணிகளை இப்போதே தொடங்கினால் தான் ஏதுவாக இருக்கும் . ஆனால் உதயநிதி ஸ்டாலின் களத்திற்கு வராமலேயே இருந்தால் கட்சியை வளர்க்க முடியாது என மூத்த நிர்வாகிகள் மற்றும் முன்னாள் அமைச்சர்கள் சிலர் ஸ்டாலினிடம் நேரடியாக கூறிய ஆதங்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இதனால் உதயநிதி ஸ்டாலின் மீது திமுக தலைவர் மு க ஸ்டாலின் அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது.
