மதுரை திருநகரில் உள்ள திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் திருப்பரங்குன்றம் செய்தியாளர்கள் அலுவலகத்தை திறந்து வைத்து சட்டத்துறை அமைச்சர் சி டி ஆர் நிர்மல் குமார் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவரிடம் தாலுகா செய்தியாளர்களுக்கும் அரசு அங்கீகார அட்டை வழங்குவது குறித்த கேள்விக்கு: 15 வருடங்களாக பத்திரிக்கையாளர்களுக்கு தேவையான சலுகைகள் சரியாக செல்லவில்லை. அந்தந்த மாவட்ட ஆட்சியருக்கு இது சம்பந்தமாக அறிவுறுத்தப்பட்டுள்ளது. பத்திரிக்கையாளர் சங்கங்கள் வாயிலாக அவர்களது தேவைகளை சரி செய்ய மாவட்ட ஆட்சியருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றார்.
தொடர்ந்து டெல்லியில் நடைபெறும் மாணவர்கள் போராட்டம்
மாணவர்கள் போராட்டத்தில் நமது நிலைப்பாடு ஏற்கனவே சொன்னது போல் டெல்லியில் மாணவர்கள் தாக்கப்பட்டதற்கு கடுமையான கண்டனத்தை பதிவு செய்தோம். அற வழியில் நடைபெற்ற போராட்டத்திற்கு காவல்துறை நடத்திய தாக்குதலுக்கு கடும் கண்டனம் தெரிவித்தோம். நம்முடைய நிலைப்பாடு நீட் வேண்டாம் தேவையற்றது, அது மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் அதிக சுமையை தரும் அதனால் எந்த பயனும் இல்லை.
திமுக பாஜக கூட்டணியா?நெருக்கடியில் திமுக? காரணம் இதுதானா?
நீட் வேண்டாம் என்பது தான் நமது நிலைப்பாடு. போராட்டத்தில் நிறைய கோரிக்கைகள் உள்ளது டெல்லியில் நீட் தேர்வை சீரமைக்க வேண்டும். நம்முடைய நிலைப்பாடு நீட் வேண்டாம்,தமிழகத்தில் அறவழியில் நடக்கும் போராட்டத்திற்கு தமிழக அரசு சார்பில் அனுமதியும் முழு பாதுகாப்பும் வழங்கப்பட்டுள்ளது. ஒரு சிலர் நீட் தேர்வை மறுசீரமைப்பு செய்யவும் ஒரு சிலர் நீட் தேர்வை விளக்க வேண்டியும் போராடுகிறார்கள். தமிழகத்தில் நடைபெறும் போராட்டங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டு பாதுகாப்பு வழங்கப்படுகிறது நம்முடைய நிலைபாட்டில் எந்த மாற்றமும் இல்லை.
தர்மேந்திர பிரதான் பதவி விலகுவது மட்டும் தீர்வு அல்ல நம்முடைய கோரிக்கை நீட் வேண்டாம். அவர் பதவி விலகினாலும் நீட் தொடரும். நீட் க்கு எதிராக நடைபெறும் போராட்டங்களில் திமுக தலைவர்கள் பங்கேற்று நிறைய பேசி உள்ளார்கள்,இதை பேசும் தகுதி திமுகவுக்கு கிடையாது. அவர்கள் தான் இதை ஐந்து வருடத்தில் மோசமான சூழ்நிலைக்கு கொண்டு சென்றார்கள் திமுக ஆட்சிக்கு வரும்போது நீட் தேர்வை நிறுத்துவோம் என்று சொன்னார்கள் தவறான நம்பிக்கையை மக்களுக்கு கொடுத்து. இப்போது இறங்கி மேடையில் பேசுகிறார்கள் நீட் தேர்வை பற்றி பேசும் தகுதி திமுகவினருக்கு கிடையாது. நீட் தேர்வு வேண்டாம் என்பதில் உறுதியாக உள்ளோம் நேரமும் காலமும் வரும்போது அதற்கான முதல் குரலாக நம்முடைய குரல் இருக்கும்.
மேகதாது விவகாரத்தில் கர்நாடகாவிற்கு முதல்வர் செல்லக்கூடாது அனைத்து கட்சி கூட்டம் கூட்ட வேண்டுமென பாமக தலைவர் அன்புமணி கூறியது குறித்த கேள்விக்கு:
இந்த விவகாரத்தில் கடந்த ஒரு மாதமாக முதல்வர் விஜய் பல கட்ட ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறார். என்ன செய்ய வேண்டுமோ அதை ஆக்கபூர்வமாக செய்ய வேண்டும் திமுக வெறும் கடிதம் மட்டும் எழுதிவிட்டு பின்னாடி துரோகம் செய்தது போல் விஷயங்கள் இருக்காது. விவசாயிகளுக்கு தேவையான தண்ணீர் கிடைக்க வேண்டும் அதேசமயம் நம்முடைய உரிமையை விட்டுக் கொடுக்கக் கூடாது தேவையான அனைத்து நடவடிக்கைகளும் முதல்வர் வலிமையாக எடுப்பார். நம்மளை தவிர வேற யாரும் எடுக்கவும் முடியாது
விவசாயிகளுக்கு பயிர் காப்பீடு வழங்குவது குறித்த கேள்விக்கு ?
விவசாயிகளுக்கு கடந்த 15 வருடங்களாக மிகவும் மோசமாக உள்ளது காப்பீடுகளுக்காக விவசாயிகள் அலைக்கழிக்கப்பட்டுள்ளனர். 2006க்கு பிறகு காப்பீடுகள் சரியாக விவசாயிகளுக்கு போய் சேரவில்லை. அதனை சீரமைக்கும் வேலை நடைபெற்று வருகிறது. எவ்வளவு விவசாயிகள் காப்பீடு பெற்றுள்ளார்கள் என்ற விவரம் சரியாக இல்லை அதை சீரமைக்க வேண்டும். விவசாயிகளுக்கு என்ன தேவையோ அது முதல்வர் வாயிலாக கிடைக்கும்.
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை திறப்பு எப்போது ?
மதுரை எய்ம்ஸ் சம்பந்தமாக தமிழக அரசின் சார்பில் தேவையான அனைத்து உதவிகளும் செய்யப்பட்டுள்ளது. விரைவில் அதை துவக்க வேண்டும் அதேபோல் மதுரை மருத்துவக் கல்லூரி மதுரை அரசு மருத்துவமனை விரிவாக்கம் செய்யும் பணியும் துவக்கி உள்ளோம் என்று கூறினார்.
Source link
