சென்னை: திமுக அரசின் சாதனைகளையும், அதனால் தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு குடும்பத்தினருக்கும் கிடைத்துள்ள பயன்களையும் இடைவிடாது பிரச்சாரம் செய்யும் பணியை ஒவ்வொருவரும் மேற்கொள்ள வேண்டும் என்று திமுக தொண்டர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் நேற்று எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட மறுநாளே மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தை நடத்தி, தேர்தல் பணிகளை எப்படி மேற்கொள்ள வேண்டும் என்பதை உங்களில் ஒருவனான நான், உங்களின் குரலாக எடுத்துச் சொன்னேன். வெற்றி நிச்சயம்.
