திமுக- இஸ்லாமியர் உறவை யாராலும் பிரிக்க முடியாது: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்- No one can separate the DMK-Muslim relationship: Chief Minister M.K. Stalin

சென்னை அமைந்தகரையில் நடைபெறும் இப்தார் நோன்பு திறப்பு விழாவில் பங்கேற்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறப்புரையாற்றினார்.

அவர் பேசியதாவது:-

புனித ரமலான் மாதத்தில் திமுக சிறுபான்மை பிரிவு நடத்தும் பேரன்பின் ஈகை பெருவிழாவில் கலந்து கொண்டதில் மகிழ்ச்சி.

இஸ்லாமியர்களுக்கும் திமுகவினருக்குமான தொடர்பு தலைமுறை தலைமுறையாக தொடர்கிறது.

ஈகைப்பண்பும் அடுத்தவருக்கு உதவக்கூடிய மனமும் அனைவரையும் சமமாக கருதி அன்பு செலுத்துபவரகள் இஸ்லாமியர்கள்.

பெண்களை மையப்படுத்தியே பல்வேறு திட்டங்களை திமுக செயல்படுத்தி வருகிறது. திமுக அரசின் மிகப்பெரிய பலமே பெண்கள்தான்.

அனைவரையும் சமமாக பாவிக்கும் எண்ணம் கொண்ட தூய இஸ்லாமியர்கள் கூடி இருக்கின்றனர்.

திமுக- இஸ்லாமியர் உறவு என்பது தலைமுறை கடந்த உறவு.

அனைத்து சிறுபான்மை இயக்கங்களும் ஒரே மேடையில் இணைந்துள்ளனர். இஸ்லாமிய இயக்கங்களின் ஒற்றுமை தமிழகத்திற்கு மட்டுமல்ல, இந்தியாவிற்கே அவசியம்.

இஸ்லிமியர்கள் மட்டுமல்ல கிறிஸ்தவர்கள் நிம்மதியாக கிறிஸ்துமஸ் கொண்டாட முடியவில்லை.

சிறுபான்மையினருக்கு எதிரான தாக்குதல்கள் குறித்து இபிஎஸ் வாய் திறந்தாரா? அதிமுகவை மட்டுமல்லாமல் தனது மனசாட்சியையும் பாஜகவிடம் அடகு இபிஎஸ் வைத்திருக்கிறார்.

இவ்வாறு அவர் கூறினார்.

Source link