இதுகுறித்து வெளியான அறிக்கையில், ‘ நடைபெற உள்ள 2026 சட்டப்பேரவை பொதுத் தேர்தலில், திமுக தலைவர் முதல்வர் மு.க.ஸ்டாலின், தேசிய முற்போக்கு திராவிட கழகப் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் ஆகியோர் இன்று (24-3-2026) தொகுதி உடன்பாடுகள் குறித்து கலந்து பேசியதில், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் இடம் பெற்றுள்ள தேசிய முற்போக்கு திராவிட கழகம், தமிழ்நாட்டில் 10 (பத்து) சட்டமன்றத் தொகுதிகளில் போட்டியிடுவதென முடிவு செய்யப்பட்டது’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.
திமுக கூட்டணியில் ஏற்கெனவே காங்கிரஸுக்கு 28, விசிகவுக்கு 8, சிபிஎம் மற்றும் சிபிஐக்கு தலா 5 தொகுதிகள், மதிமுகவுக்கு 4 தொகுதிகள், ஐயுஎம்எல், மமக,கொமதேக ஆகிய கட்சிகளுக்கு தலா இரு இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
