சமூகவிரோதிகள் ஆளும்கட்சியில் அடைக்கலமாகி அதை கேடயமாக பயன்படுத்துகிறார்கள்.முதலமைச்சர் இரும்புக்கரம் கொண்டு அதை அடக்க வேண்டும் என அண்ணாமலை வலியுறுத்தி உள்ளார்.
கோவை மாவட்டம் கேரள எல்லையை ஒட்டிய வேலாந்தாவளம் பகுதியில் அமைந்துள்ள தனியார் பள்ளியில் விஜயதசமியை முன்னிட்டு பெற்றோர்களுக்கான சிறப்பு கருத்தரங்கம் நிகழ்வு நடைபெற்றது. இதில் We the Leader அண்ணாமலை சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றினார்.
தமிழ்நாட்டில் 50 சதவிகிதம் மாணவர்கள் உயர்கல்வி
பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அண்ணாமலை, நான் எப்பொழுதும் மக்களுக்காக பேசுகிறேன் என்றும் தமிழகத்தை பொறுத்தவரை இன்றைய நாளில் கல்வித்திறன் ஆற்றல் திறன் மிகவும் குறைந்து கொண்டே செல்வதாகவும் 10 முதல் 12-ம் வகுப்பு செல்லக்கூடியதில் ஆண் மாணவர்கள் ஒன்பது சதவிகிதம் குறைந்துள்ளதாகவும் பெண் மாணவிகள் ஆறு சதவிகிதம் குறைந்துள்ளதாகவும் குறிப்பிட்டார். தமிழ்நாட்டைப் பொறுத்தவரை 50 சதவிகிதம் மாணவர்கள் உயர்கல்வி செல்வதாக பெருமை கொள்கிறோம் .ஆனால் தற்பொழுது அது குறைந்துள்ளது என்று தெரிவித்தார். எனவே அரசு இதனை கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும் என்றும் குழந்தைகள் அதிக மொழிகளை கற்க வேண்டும் என்று விரும்புகிறார்கள் என்று கூறிய அவர் மத்திய அரசுசில திட்டங்களை கொண்டு வரும் பொழுது கூட இங்கு அதற்கு எதிர்ப்புகள் இருந்ததாகவும் ஜெர்மன் மொழி ஆங்கில மொழிகளின் மாற்றம் செய்ததால் சிபிஎஸ்சி பள்ளிகளுக்கு பல்வேறு பிரச்சனைகள் வந்தது என்று கூறிய அவர் சிபிஎஸ்சி பள்ளிகளில் அதிக மொழிகளை கற்றுக் கொள்வதற்கு அனுமதி வழங்க வேண்டும் ஸ்மித்தி ராணிக்கு கோரிக்கை விடுத்த அவர் எதற்காக தடுக்க வேண்டும்.
இந்திய மொழிகளில் கட்டுப்பாடு விதிப்பது தவறு
ஆங்கில மொழியுடன் சேர்த்து பல்வேறு மொழிகளையும் குழந்தைகள் கற்றுக் கொள்ளட்டும் என்று தெரிவித்தார். தமிழ்நாடு அரசு மொழிகளை தடுப்பதாக கூறிய அவர் அதெல்லாம் 1960-70களில் வேண்டுமானால் சரி. ஆனால் தற்பொழுது உலக தரம் வாய்ந்த கல்வி இருக்க வேண்டும் என வலியுறுத்தினார். மேலும் மத்திய அரசு பிற நாட்டு மொழிகளில் கட்டுப்பாடுகள் விதிப்பதும் தவறு மாநில அரசு இந்திய மொழிகளில் கட்டுப்பாடு விதிப்பதும் தவறு என்று குற்றம் சாட்டினார்.
பல்வேறு நாடுகளில் குழந்தைகள் பயன்படுத்த சமூக வலைத்தளங்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகிறது என்பதை சுட்டி காட்டிய அவர் ஆனால் நம்முடைய நாட்டில் அவ்வாறு இல்லை பத்து வயது எட்டு வயது குழந்தைகள் கூட இன்ஸ்டாகிராமை பயன்படுத்துகிறார்கள. அதிலேயே மூழ்கி இருக்கிறார்கள் என்று கூறியவர் மத்திய அரசு இதில் கவனத்தை செலுத்த வேண்டும் பரிசீலனை செய்ய வேண்டும் என்று தெரிவித்தார்.
மத்திய அரசு சமூக வலைத்தளங்கள் பயன்படுத்த தடை விதிக்கனும்
மத்திய அரசும் 18 வயது களுக்கு கீழ் உள்ளவர்களுக்கு சமூக வலைத்தளங்கள் பயன்படுத்த தடை விதிக்க வேண்டும் என்ற நேரம் வந்துவிட்டதாகவும் குறிப்பிட்டார். படிப்பதற்கு வேண்டுமென்றால் google இருக்கட்டும் ஆனால் சமூக வலைத்தளங்கள் பல்வேறு சீர்கேடுகளை ஏற்படுத்தி வருவதாகவும் விமர்சித்தார். திமுக ஆட்சியின் பொழுதே அந்த கட்சியை சேர்ந்தவர்கள் கஞ்சா கடத்தலில் ஈடுபட்டார்கள் தற்பொழுது தமிழக வெற்றி கழகம் ஆட்சிக்கு வந்த பிறகு அவர்களில் சிலர் சிக்க ஆரம்பித்துள்ளார்கள் எனவே இதனை இரும்பு கரம் கொண்டு தமிழக முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
மேலும் ஆளும் கட்சியை பார்த்து சமூக விரோதிகள் அடைக்கலம் தேடி கொள்கிறார்கள் என்றும் எந்த கட்சியாலும் கட்சியாக வருகிறதோ உடனடியாக அங்கு சென்று அவர்களை சந்தித்து ஒரு புகைப்படம் எடுத்து அவர்களது சமூக வலைத்தளங்களில் வைத்துக் கொள்கிறார்கள் என்று கூறிய அவர் பல்வேறு சமூக விரோதிகள் ஆளும் கட்சியை கேடயமாக பயன்படுத்தி வருகிறார்கள் தமிழக வெற்றி கழகத்திலும் சில நிர்வாகிகளை கைது செய்ய ஆரம்பித்துள்ளார்கள் அதனை தமிழக முதல்வர் இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும் என தெரிவித்தார்.
திமுக செய்த அதே தவறு .. தவெக ஆட்சியிலும்
நாம் தமிழர் கட்சி தாராபுரம் வேட்பாளர் கார்த்திகா கைது செய்யப்பட்டது தொடர்பான கேள்விக்கு பதில் அளித்த அண்ணாமலை, தேர்தல் முடிந்து முடிவுகள் வந்த பிறகு கோவை மாநகரத்திற்கு தாராபுரத்தின் காவல்துறையினர் வந்து அவர்களை கைது செய்து அழைத்துச் சென்றுள்ளனர். அதற்கான கட்டாயம் என்ன? என்று கேள்வி எழுப்பினார். காவல்துறை ஒரு நோட்டீஸ் கொடுத்து அவர்களை காவல் நிலையத்திற்கு வரும்படி அழைத்திருக்கலாம். ஆனால் இந்த அளவிற்கு அது ஒரு பெரிய கேஸ் எல்லாம் கிடையாது என்ற அவர் காவல்துறை என்ன காட்ட நினைக்கிறது? என்ற கேள்வி எழுப்பினார்.
தமிழகத்தின் காவல்துறை ஆளும் கட்சியின் கைப்பாவையாக மாறுவதை கட்டுப்படுத்த வேண்டும் என்றும் அன்றைக்கே கைது செய்திருக்கலாமே? ஆனால் தற்பொழுது வந்து கைது செய்வது எல்லாம் விசித்திரமாக உள்ளது என்று கூறிய அவர் காவல்துறையின் மீது பல்வேறு சந்தேகங்கள் எழுவதாகவும் தெரிவித்தார். திமுகவினர் ஒன்றை தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும் என்று கூறிய அண்ணாமலை தமிழக மக்கள் தற்பொழுது நாகரிகமான அரசியல் வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள் என்றும் தரம் தாழ்ந்து பேசுவதை மக்கள் எதிர்பார்க்கவில்லை .
அவர்களுக்கு வாக்களிப்பதற்கும் மக்கள் தயாராக இல்லை பெண்களைத் தரையை குறைவாக பேசினாலும் ஆமோதிக்கிறார்கள் என்று கூறிய அண்ணாமலை வரம்பு மீறிய பிரச்சாரங்கள் எல்லாம் தமிழகத்தில் முடிந்து விட்டது தற்பொழுது உள்ளது புது அரசியல் புதுவிதமான அரசியல் இளைஞர்கள் படித்தவர்கள் அனைவரும் அரசியலை வேறு விதமாக பார்க்கிறார்கள் எனவே தரம் தாழ்ந்த அரசியல் என்பது அந்த கட்சிக்கு பாதிப்பை தான் ஏற்படுத்தும் என்று கூறினார். எங்கள் அமைப்பை பொருத்தவரை ஒவ்வொரு உள்ளாட்சிக்கும் ஒரு மாஸ்டர் பிளான் தயாரிக்கப்படுகிறது என்று தெரிவித்தார். உள்ளாட்சித் தேர்தல் பிரச்சாரமே எங்கள் அமைப்பை பொறுத்தவரை ஒரு தேசிய பிரச்சாரமாக இருக்கும் என்று கூறினார்.
Source link
