திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நாளை வேட்புமனு தாக்கல் – வேகமெடுக்கும் தேர்தல் பணிகள்! – m. k. stalin will file his nomination tomorrow to contest from the kolathur assembly constituency

கொளத்தூர் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் திமுக தலைவர் மு.க ஸ்டாலின் நாளை வேட்பு மனு தாக்கல் செய்கிறார்.

DMK Chief MK Stalin(புகைப்படங்கள்Samayam Tamil)
வருகிற ஏப்ரல் 23ஆம் தேதி தமிழகத்திற்கு தேர்தல் நாளாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. தமிழக தேர்தல் களத்தில் நான்கு முனைபோட்டி வலுத்திருக்கிறது. அனைத்து கட்சிகளும் தேர்தல் வேலைகளில் தீவிரமாக இயங்கி வருகின்றனர்.

திமுகவின் தேர்தல் வியூகம்

ஆளும் கட்சியான திமுக இம்முறை தேர்தலில் வெற்றி பெறுவதற்கான வியூகத்தை பல நாட்களுக்கு முன்பாகவே வகுத்து அதற்கான வேலைகளில் ஈடுபட்டதாக விமர்சகர்கள் தெரிவிக்கின்றன. ஆனால் திமுக கூட்டணியில் கடந்த சில நாட்களாகவே சலசலப்பு நீடித்து வந்தது. கூட்டணி இறுதி செய்வது தொகுதி பங்கீடு பேச்சு வார்த்தை எந்தெந்த தொகுதிகளில் எந்தெந்த கட்சிகளுக்கு வழங்கப்பட போகிறது என்று கேள்வி தேர்தல் அறிக்கை என திமுக முன்பு பலவிதமான Task இருந்தன.
ஆனால் அந்த கூட்டணி சிக்கல்களை தற்போது திமுக சரிசெய்து இன்றைய தினம் தேர்தல் அறிக்கையையும் வெளியிட்டு இருக்கிறது. அதிமுக ஏற்கனவே மூன்று கட்டமாக தேர்தல் அறிக்கையை வெளியிட்டிருந்தது. தமிழக வெற்றிக்கழகமும் தேர்தல் அறிக்கையை வெளியிட்டு விட்டது,இந்த சூழலில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட திமுகவின் தேர்தல் அறிக்கை இன்றைய தினம் வெளியாகி இருக்கிறது.
நேற்றைய தினம் திமுகவின் வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்பட்டது. இந்த வேட்பாளர் பட்டியலில் 80 சதவீதத்திற்கும் மேலான பட்டதாரிகளுக்கு திமுக வாய்ப்பு வழங்கியிருக்கிறது. மேலும் 164 வேட்பாளர்களில் 165 பேர் படித்த பட்டதாரிகள் என திமுக சார்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது அதேபோல 60 புது முகங்களுக்கு இந்த முறை திமுக தலைமை தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளித்திருக்கிறது.
இந்த சூழலில் தான் கொளத்தூர் தொகுதியில் முதல்வர் மு.க ஸ்டாலின் போட்டியிடுவார் என சொல்லப்பட்டது. எனவே கொளத்தூர் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட இருக்கின்ற திமுக தலைவர் ஸ்டாலின் நாளை வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.
நாளை 12:30 மணி அளவில் கொளத்தூர் பேப்பர் மில்ஸ் சாலையில் அமைந்திருக்கக் கூடிய பெருநகர சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் தேர்தலுக்கான வேட்பு மனுவை ஸ்டாலின் தாக்கல் செய்வார் என சொல்லப்படுகிறது.
தமிழகத்தில் வேட்பு மனு நாளை முதல் பெறப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்திருக்கக்கூடிய சூழலில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முதல் நாளே வேட்பு மனு தாக்கல் செய்ய உள்ளது குறிப்பிடத்தக்கது.

திமுகவின் வெற்றி வாய்ப்பு?

கூட்டணியில் சில கட்சிகள் திமுக பங்கிட்டு கொடுத்த தொகுதிகளில் உடன்பாடு இல்லை என்றாலும் ஒட்டுமொத்த வெற்றியை கருத்தில் கொண்டு தலைமை கொடுத்த தொகுதிகளுக்கு கூட்டணிகள் ஒப்புக்கொண்டதாக சொல்லப்படுகிறது.
மேலும் திமுக தலைவர் ஸ்டாலின் அனைத்து கட்சியினரையும் அரவணைத்து செயல்படுவதன் மூலம் மகத்தான வெற்றியை பெற முயல்வதாகவும் அதிக அளவிலான கூட்டணி கட்சிகள் இடம் பெற்றிருந்த போதிலும் 165 இடங்களில் திமுக தனித்து போட்டியிடுவது மிக முக்கியமானது என்றும் சொல்லப்படுகிறது. அதோடு கடந்த 2021 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் திமுக வெற்றி பெற முக்கியமான காரணங்களில் ஒன்று திமுகவின் தேர்தல் அறிக்கையாகும். இம்முறையும் திமுகவின் தேர்தல் அறிக்கையில் பல முக்கியமான அம்சங்கள் இடம் பெற்று இருப்பதால் அது திமுகவிற்கு பலமாக அமையக்கூடும் எனவும் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.