அரசியல் தேர்தல் களம் சூடு பிடித்திருக்கும் நிலையில் திராவிட இயக்க எழுத்தாளரும், பேச்சாளருமான மதிமாறன் அரசியல் கூட்டணி சூழல்கள் குறித்து அவரது கருத்தை நக்கீரன் டிவி யூடியூப் சேனலில் பகிர்ந்து கொண்டார்.
ஆர்எஸ்எஸ்க்கு எதிராக செயல்படும் முதல்வர் மைத்ரேயன், ஓபிஎஸ், தேமுதிகவை ஆதரித்து அவர்களுக்கு பொலிட்டிகள் மைலேஜ் திமுக தருகிறதோ?
இல்லை அவர்கள் யாரும் ஆர்எஸ்எஸ் கண்ணோட்டத்தோடு திமுக கூட்டணியில் இல்லை. திமுகவிற்குள் யார் வேண்டுமானாலும் போய் சேர்ந்து கொள்ளலாம். உள்ளே வந்த பிறகு செயல்பாடு எப்படி இருக்கிறது என்பதைத்தான் பார்க்க வேண்டும். நடிகர் எஸ்.வி.சேகர் இருக்கிறார். அவருடைய ஐடியாலஜியில் பெரும் மாற்றம் ஏற்படுவதற்கான வாய்ப்பு இல்லை. ஆனால் திமுக மேடையில் எஸ்.வி.சேகர் தன் ஐடியாலஜி சார்ந்து பேசினால் தான் பிரச்சனை. வெளியில் இருந்து திமுகவை ஆதரிக்கின்ற எஸ்.வி.சேகர் போன்றவர்களே அப்படி இருக்கும்போது கட்சிக்குள் இருக்கிறவர்களே அப்படி செயல்படுவதற்கு வாய்ப்பு இல்லை. அப்படி செயல்பட்டால் கட்சியில் இருந்து நீக்கிவிடுவார்கள்.
கொள்கைக் கூட்டணி என்று திமுக சொன்னார்கள். ஆனால் இப்போது தேமுதிக கூட்டணியில் சேர்ந்துள்ளது. ஓபிஎஸ் கட்சியில் சேர்ந்திருக்கிறார். தேமுதிகவின் வருகையை பார்க்கையில் அவர்கள் கொஞ்ச நாளைக்கு முன்னாடி திமுக தலைவரை குறித்தெல்லாம் கூட தனிப்பட்ட முறையில் மோசமாக பேசி இருக்கிறார்கள். இப்போது தேர்தல் நேரத்தில் கூட்டணியாக சேர்ந்ததற்கு பிற்பாடு அவர்கள் தேர்தலில் எப்படி பயணிக்கிறார்கள் என்பதைப் பொறுத்து தான் இது கொள்கை கூட்டணியா இல்லையா என்பதை சொல்ல முடியும். தேமுதிக, பாஜக எதிர்ப்பு பேசுவார்களா? அல்லது பாஜகவின் வேறு ஐடியாலஜி சார்ந்து, நேரடியாக பாஜகவை ஆதரிக்காவிட்டாலும் அதன் இடஒதுக்கீடு கொள்கை அல்லது பாஜகவை வேறு ஏதாவது ஒரு வகையில் ஐடியாலஜியில் சேர்ந்து பயணிக்கிறார்களா என்பதை பொறுத்துதான் இது கொள்கை சார்ந்த கூட்டணியா இல்லையா என்று சொல்ல முடியும்.
இதே கூட்டணியில் சிபிஎம், சிபிஐ, விசிக என மிகக் கறாராக பாஜகவை எதிர்ப்பவர்கள் உள்ளார்கள். அதே கூட்டணியில் தான் தேமுதிகவும் சேர்ந்துள்ளது. பாஜகவை எதிர்ப்பதில் பிரதான பங்கு வகித்து வரும் சிபிஎம், சிபிஐ தான் இதே தேமுதிக தலைமையில் அமைந்த மக்கள் நலக் கூட்டணியில் அங்கம் வகித்தது. பாஜகவை போர்க்குணத்துடன் எதிர்க்கிற சிபிஎம், சிபிஐ பங்குபெற்ற கூட்டமைப்பின் தலைவராகவே இருந்தது தேமுதிக.
திமுக எதிர்ப்பில் தான் தேமுதிக இருந்தார்கள். அவர்களது கட்சியே திமுக எதிர்ப்புக்காக தொடங்கப்பட்ட கட்சிதான். இன்னொரு பெரிய விஷயம் தமிழ்நாட்டில் எதிர்க்கட்சி அந்தஸ்த்திற்கு வந்த தேமுதிக 20 வருடத்திற்கு மேல் விஜயகாந்த் இருந்து அவ்வளவு செய்தும் கூட ஒரு எம்பியை அவர்களால் பெற முடியவில்லை. ஒரே ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் கூட அவர்களால் பெற முடியவில்லை. திமுக கூட்டணிக்கு வந்த பிறகு ஒரு வாரத்தில் திமுக தலைவர் அவர்களை எம்பி ஆக்கி இருக்கிறார். இன்னொன்று திமுகவுக்கு ஆதரவாக எந்த பங்களிப்பையும் தேமுதிக ஆரம்பிக்கவே இல்லை. அதற்குள் எம்பி ஆகிவிட்டார்கள். இது முதல்வரின் ஜனநாயக தன்மையை குறிக்கிறது.
