எனவே, அரசின் திட்டங்கள் மற்றும் சாதனைகளை மக்களுக்கு எடுத்துக் கூறி வீடு வீடாகச் சென்று வாக்கு சேகரித்து நடைபெறும் சட்டப்பேரவை தேர்தலில் திமுக தலைவரால் அறிவிக்கப்பட்ட வேட்பாளர் தியாகராஜனை 50,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்வோம்.
எதிர் முகாமில் உள்ளவர்களுக்கு சாதனையை சொல்லி ஓட்டு கேட்கும் அளவிற்கு அவர்கள் ஒன்றும் செய்யவில்லை. அதேபோல் எதிர்முகாமில் உள்ளவர்களின் தேர்தல் அறிக்கையை விட திமுகவின் தேர்தல் அறிக்கை ஒரு சூப்பர் ஸ்டார். திமுகவின் தேர்தல் அறிக்கை அடித்தட்டு மக்கள் வரை சென்று சேர்ந்துள்ளது. நிச்சயமாக மிகப் பெரிய ஆதரவை வாக்குகள் மூலம் கரூர் மாவட்ட மக்கள் திமுகவுக்கும், மதசார்பற்ற கூட்டணிக்கும் வழங்க தயாராக இருகின்றனர்.
கரூரில் முதல்வர் ஸ்டாலின் நாளை பிரச்சாரம்: நாளை கரூர் மாவட்டம் ராயனூரில் மாவட்டத்தில் திமுக போடியிடவுள்ள வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொள்ளவுள்ளார். சுமார் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் இந்த தேர்தல் பிரச்சாரத்தில் பங்கேற்க உள்ளனர்.
