திமுக முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் கைது: ரூ.100 கோடி ஊழல் வழக்கு -மு.க. ஸ்டாலினுக்கு அதிகரிக்கும் நெருக்கடி – rs. 100 crore bribery case – former dmk minister anbil mahesh has been arrested

ரூ.100 கோடி லஞ்சம் வழக்கு – தி.மு.க முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் கைது செய்ய்யப்பட்டுள்ளார். இது குறித்து விரிவாக பார்க்கலாம்.

கடந்த திமுக ஆட்சிக்காலத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சராக இருந்தவர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி.திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், அன்பில் மகேஷைத் தனது வளர்ப்பு மகனைப் போல நடத்தினார்.

கே.என். நேருவின் ஆதிக்கத்தைக் கட்டுப்படுத்தி திருச்சியில் அன்பில் மகேஷின் செல்வாக்கை வலுப்படுத்தினார்.மேலும், துரை சந்திரசேகர் போன்ற பல மூத்த தலைவர்களைக் கடந்து, உதயநிதி ஸ்டாலின் அமைச்சரவையில் இணைவதற்கு முன்பாகவே அன்பில் மகேஷிற்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு அமைச்சரவையில் முக்கியப் பொறுப்பு வழங்கி அழகு பார்க்கப்பட்டது.

கோவில் நிலம் அபகரிப்பு! திமுக நிர்வாகியின் 50 Crores ஊழல்

தனியார் பள்ளிகளிடம் பணம் வசூலித்ததாகப் புகார்

இப்படியான சூழலில்,தனியார் பள்ளிகளிடம் அனுமதி பெற்றுத் தருவதாகக் கூறி கோடிக்கணக்கில் பணம் வசூலிக்கப்பட்ட ஊழல் புகாரில்,முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ், தனியார் பள்ளிகள் சங்கத் தலைவர் பி.டி. அரசகுமார் மற்றும் முன்னாள் எம்.எல்.ஏ. முத்துக்குமார் உள்ளிட்ட பலரின் பெயர்கள் அடிபட்டன. இது தொடர்பாகப் பல்வேறு ஆடியோ மற்றும் வீடியோ ஆதாரங்களும் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தின. இதனைத் தொடர்ந்து முதல்வர் விஜய் தலைமையிலான அரசு ஆட்சி அமைத்தத்தை பிறகு அடுத்தக்கட்ட விசாரணைகளை தீவிரப்படுத்தியது. குறிப்பாக இந்த விவாகரம் குறித்து சட்டசபையில் அமைச்சர் மரிய வில்சன் பேசியிருந்தார்.

ரூ.100 கோடி அனுமதி ஊழல் வழக்கை தீவிரப்படுத்த தவெக அரசு

அதன் பிறகு அன்பில் மகேஷ் வீடு,அவரது ஆதரவருக்கு சொந்தமான இடங்களில் மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் சோதனை நடத்தினர்.இந்த சோதனையின் சில முக்கிய ஆதரங்கள் கைப்பற்றப்பட்டதாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து , மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர்அன்பில் மகேஷிடம் சுமார்8 மணி நேரத்திற்கு மேலாக விசாரணைநடத்தினர். சுமார் 230க்கும் மேற்பட்ட கேள்விகள் கேட்டகப்பட்டதாக தகவல் வெளியானது.

முன்ஜாமினை தள்ளுபடி செய்த நீதிமன்றம்

ஏற்கனவே இந்த வழக்கில் தலைமறைவாக இருந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் முத்துக்குமார் என்பவரைக் கடந்த காலத்தில் குண்டர் சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்திருந்தனர். பின்னர் நீதிமன்ற உத்தரவின் பேரில் அவர் விடுவிக்கப்பட்ட போதிலும், அவரிடமிருந்து பெறப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில்தான் தற்போது அன்பில் மகேஷிற்கு எதிராகப் பல உண்மைகள் வெளிவந்துள்ளன. முத்துக்குமார்தான் இந்த விவகாரத்தில் மூளையாகச் செயல்பட்டுள்ளார் என்றும், அவர்தான் அன்பில் மகேஷை இதற்கு உடந்தையாக இருக்கச் செய்துள்ளார் என்றும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

திமுக முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் கைது

இந்த சூழலில், இந்த வழக்கில் தனக்கு முன்ஜாமீன் வழங்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் அன்பில் மகேஷ் மனு தாக்கல் செய்திருந்தார். நீதிபதி லட்சுமிநாராயணன் முன்னிலையில் இந்த மனு விசாரணைக்கு வந்தபோது, இது தீவிரமான குற்றச்சாட்டு என்பதாலும், விசாரணை ஆரம்ப கட்டத்தில் இருப்பதாலும் முன்ஜாமீன் வழங்க முடியாது என்று நீதிமன்றம் திட்டவட்டமாகத் தள்ளுபடி செய்தது. முன்ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டதைத் தொடர்ந்து, நெல்சன் மாணிக்கம் சாலையில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் அன்பில் மகேஷ் தலைமறைவாக இருப்பதாகக் காவல்துறைக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதனையடுத்து, அங்கு விரைந்த மத்திய குற்றப்பிரிவு போலீசார் அவரைச் சுற்றிவளைத்துக் கைது செய்தனர். பின்னர் அவர் பாதுகாப்பாகக் காவல் ஆணையர் அலுவலகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு, அங்கு வைத்து அவரிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இவ்வழக்கில் மேலும் பல முக்கிய உண்மைகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Source link