இதே திருச்சியை சேர்ந்த அமைச்சர், அரசு வேலை வாங்கி தருவதாக ரூ.12,000 கோடி ஊழல் செய்துள்ளார். கரூர் நிகழ்ச்சி எப்படி ஒரு சூழ்ச்சியோ, அதேபோல், ஜனநாயகன் பட வெளியிட்டுக்கும் கூட்டு சதி நடைபெறுகிறது. திமுக வேறு, பாஜக வேறு அல்ல இரண்டுமே ஒன்றுதான்.
தொடர்ந்து தவெக தேர்தல் வாக்குறுதி குறித்து பட்டியலிட்ட விஜய், ஏப்ரல் 23ம் தேதி உங்களுக்கான தேர்தல், வசதியான வாழ்க்கையை உதரிவிட்டு உங்களுக்காக வந்துள்ள எனக்கு ஒரு வாய்ப்பு கொடுங்க. அதோடு, திருச்சி மாவட்டத்துக்கு அறிவிக்கப்பட்டுள்ள வேட்பாளர்கள் அனைவரையும் வெற்றி பெறச் செய்யுங்கள். தவெக வேட்பாளர்கள் வேறு; நான் வேறு அல்ல’’ என்று தெரிவித்தார்.
