திருச்சி: அதிமுக. பாஜ கூட்டணி தொகுதி பங்கீடு பற்றி இன்னும் நாங்கள் முடிவு செய்யவில்லை என்று தமிழக பாஜ தலைவர்

திருச்சி: அதிமுக. பாஜ கூட்டணி தொகுதி பங்கீடு பற்றி இன்னும் நாங்கள் முடிவு செய்யவில்லை என்று தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன் கூறி உள்ளார்.

திருச்சி மாவட்டம் பஞ்சப்பூரில் தேசிய ஜனநாயக கூட்டணியின் சார்பில் மார்ச் 11ல் பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. இதில் பிரதமர் மோடி கலந்து கொள்கிறார். கூட்டம் நடைபெறவுள்ள இடத்தை தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன் இன்று பார்வையிட்டார். பின்னர் நிருபர்களுக்கு அவர் அளித்த பேட்டி;

தமிழகத்தில் சட்டசபை தேர்தல் தேதி இன்னமும் அறிவிக்கப்படவில்லை. காலம் உள்ளது. தொகுதி பங்கீடு சம்பந்தமாக நாங்கள் இன்னும் முடிவு செய்யவில்லை. தமிழகத்தில் பிரதமர் மோடியின் தேர்தல் பிரசாரக்கூட்டம் மிகப்பெரும் எழுச்சியை தந்திருக்கிறது. இங்கு நடைபெறுகிற ஒரு காட்டுத்தர்பார் ஆட்சி, கஞ்சா ஆட்சி, பெண்கள், சிறு குழந்தைகள் நடமாட முடியாத ஆட்சி தான் இங்கே நடைபெற்றுக் கொண்டு இருக்கிறது.

கஞ்சா பயன்படுத்திவிட்டு சாலையில் வருவோர், போவோர் எல்லாம் வெட்டப்படுகின்றனர். தினசரி ஏதோ ஒரு இடத்தில் இந்த சம்பவம் நடக்கிறது. அதற்கு என்ன காரணம் என்றே தெரியவில்லை. திருநெல்வேலி அருகே கும்பகோணம் அருகே இதுபோன்ற சம்பவங்கள் நடந்திருக்கிறது.

சொத்து வரி, மின் கட்டணம் 300 மடங்கு அதிகம். சிறு, குறு தொழில் செய்வோருக்கு ஆண்டுக்கு 6 சதவீதம் வரை மின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. தேர்தல் அறிக்கையில் கூறியவற்றில் ஏதோ ஒன்றிரண்டை செய்துவிட்டு வேறு எதுவும் செய்யவில்லை.

ரூ.1000 தரேன் என்று சொன்னார்கள். 28 மாதங்கள் ஆகியும் தரவில்லை. தேர்தல் வந்தவுடன் தருகின்றனர். பொங்கலுக்கு போன வருடம், அதற்கு முந்தைய வருடம் தரவில்லை… இப்போது தான் தருகின்றனர்.

ஆனால் இப்போது கோடை கால விடுமுறை என்று ரூபாய் தருகின்றனர். காரணம்… ஓட்டுக்காக. மக்கள் இதை எல்லாம் புரிந்து வைத்திருக்கிறார்கள். தேர்தல் முடிந்த பின்னர் ஆட்சி மாற்றம் உறுதி என்று மக்கள் தீர்மானித்துவிட்டார்கள்.

இவ்வாறு நயினார் நாகேந்திரன் பேட்டியில் கூறினார்.

Source link