திருச்சி: அரசு மருத்துவமனையில் குழந்தை கடத்தல்; 5 மணி நேரத்தில் மீட்பு – திருச்சி போலீஸ் அதிரடி!

திருச்சி அரசு மருத்துவமனையில் கடத்தப்பட்ட குழந்தையை போலீசார் துரிதமாக செயல்பட்டு 5 மணி நேரத்தில் மீட்டுள்ளனர்.

குழந்தையின் உறவினர்கள்

திருச்சி, மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் கடந்த 11-ம் தேதி விக்னேஷ் – சுகன்யா தம்பதிக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. இந்த நிலையில், சுகன்யாவிடம் மருத்துவமனைக்கு வந்த பெண் ஒருவர் பேசி பழகி, பிறந்த குழந்தைக்கு தடுப்பூசி செலுத்துவதாக கூறிவிட்டு அந்த குழந்தையை கடத்திச் சென்றுள்ளார். நீண்ட நேரம் ஆகியும் அவர் வராததால் அதிர்ச்சி அடைந்த விக்னேஷ், இது குறித்து அரசு மருத்துவமனை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அவர் கொடுத்த புகாரின் பேரில் போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

hospital
hospital
d.dixith

இந்நிலையில், தீவிரமாக தேடி, 5 மணி நேரத்தில் காவல்துறையினர் குழந்தையை பாதுகாப்பாக மீட்டனர். குழந்தையை கடத்திய பெண் செவிலியர் சீருடை அணிந்து தடுப்பூசி போடுவதாகக் கூறி குழந்தையை எடுத்துச் சென்றுள்ளார். பிடிபட்ட பெண்ணின் பெயர் மீனாட்சி என்று தெரியவந்திருக்கிறது. குழந்தை இல்லாத ஏக்கத்தில் இருந்ததால், குழந்தையை எடுத்துச் சென்றதாகக் கூறியிருக்கிறார். அவரிடம் போலீஸார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Source link